Karur crime One arrested in two-wheeler theft case in kuluthalai – TNN | இரு சக்கர வாகனம் திருட்டு… ஊர்க் காவல் படை வீரரை சூழ்ந்த மக்கள்


கருர் குளித்தலையில் இரு சக்கர வாகனம் திருட்டு வழக்கில் குளித்தலை போலீசார், ஊர்க் காவல் படை வீரர் ஒருவரை கைது செய்தனர்.
 

 
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 36. இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடக்கு சேர்வை பட்டி கிராமத்திற்கு கடந்த பத்தாம் தேதி சென்றிருந்தார். அங்கு சாலை ஓரத்தில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து பழனிசாமி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் காலை 8 மணி அளவில் நச்சலூரில் திருட்டுப் போன இருசக்கர வாகனத்தை ஒரு சிறுவன் ஓட்டி வரும்போது பழனிசாமி தனது இருசக்கர வாகனம் என்று கூறி வாகனத்தை நிறுத்தி வண்டியை பிடித்து விசாரணை செய்தார். அப்போது அந்த சிறுவன் ஆலத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கியதாக கூறினார்.
 
 

 
இதையடுத்து, கிராம பொதுமக்கள் இருசக்கர வாகன ஓட்டி வந்த சிறுவன் மூலம் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரை வரவழைத்து பிடித்து வைத்தனர். பாஸ்கரிடம் விசாரணை செய்தபோது இருசக்கர வாகனங்கள் உரிய ஆவணத்துடன் பணம் கொடுத்து வாகனங்களை வாங்குதல், வாகன புக்கின் பேரில் பைனான்ஸ் முன்பணம் செலுத்துதல் உள்பட தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், புரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை (ஹோம் கார்டு) மணிகண்டன் வயது 30 என்பவர் தன்னிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்து அடமானம் வைத்ததாக கூறினார். வாகனம் திருட்டு போன பழனிச்சாமி மணப்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவும் இதே போல் நச்சலூரில் இருசக்கர வாகனம் திருட்டு போனவர்கள் சூழ்ந்து கொண்டதால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் குளித்தலை காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். குளித்தலை சிறப்பு உதவி ஆய்வாளர் சிங்காரம் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது ஊர்க்காவல் படையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கிராம பொதுமக்கள் பிடித்து வைத்திருந்தனர்.
 

 
தகவல் அறிந்து வந்த மணப்பாறை காவல் துறையினர் காணாமல் போனதாக புகார் கொடுத்த இரு சக்கர வாகனத்தை மீட்டு மணப்பாறைக்கு கொண்டு சென்றனர். பொதுமக்களிடம் இருந்து ஊர்க்காவல் படையைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் வாகனங்களை அடமானம் வாங்கிய பாஸ்கர் இருவரையும் குளித்தலை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தோகைமலை அருகே கீழவெளியூரை சேர்ந்த சரத் என்பவர் மூலம் பல்வேறு வாகனத்தை திருடி ஊர்க்காவல் படையை சேர்ந்த மணிகண்டன் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. குளித்தலை போலீசார் இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து ஊர் காவல் படையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.
ஊர்க்காவல் படையைச் சேர்ந்த மணிகண்டன் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக குளித்தலை மற்றும் தோகைமலை காவல் நிலையங்களில் காவலர்களுக்கு உதவியாகவும் அவ்வப்போது காவல் ஆய்வாளர்கள் அவர்களுக்கு ஜீப் ஓட்டுனராகவும் இருந்து வந்தார் என்பது தெரிய வந்தது. குளித்தலை, தோகைமலை, நச்சலூர், கல்லை பகுதிகளில் இரு சக்கர வாகனம் திருட்டு சம்பந்தமாக ஊர் காவல் படை வீரர் உடந்தையாக இருந்திருப்பார் என பல்வேறு கோணங்களில் குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 
 

மேலும் காண

Source link