kamalhassan starrer indian 2 movie release date to be fixed either in may or june


மே அல்லது ஜூன் ஆகிய இரு மாதங்களில் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’ (Indian 2).  ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர்,  சித்தார்த், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மாரிமுத்து, மனோபாலா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்புத் துவங்கியது. இதனிடையில் கொரோனா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என பலவிதமான சவால்களை படக்குழு சந்தித்துள்ளது. கடந்த நவம்பர் 3ஆம் தேதி இப்படத்தின் இண்ட்ரோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.  தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் , இந்தி என பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் இந்தப் படத்தின் அறிமுக வீடியோவை அந்தந்த மொழிகளின் பிரபல நடிகர்கள் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் நடிகர் கமல்ஹாசனின் பகுதிகள் முழுவதுமாக படமெடுக்கப் பட்டதாக படக்குழு சார்பாக தகவல் வெளியானது. 

Most Anticipated Kollywood Sequel #Indian2 Locked the Summer – May 2024 Slot 💥 1st Part Almost Collected in 1997 Itself With a Huge Margin at North Belt 🔥..!!Senapathy Returns 🥵💥 pic.twitter.com/Zxj3bCf038
— Siddarth ツ 🧊🔥 (@TheCulpritVJ_) February 24, 2024

ரிலீஸ் தேதி
2024 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று இந்தியன் 2. இப்படியான நிலையில் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.  இந்தியன் 2 படத்தை வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஏற்கனவே ஸ்டார், தங்கலான், விஷால்  நடித்திருக்கும் ரத்னம் மற்றும் பாலா இயக்கியிருக்கும் வணங்கான் உள்ளிட்டப் படங்கள் நிலுவையில் இருக்கின்றன. இப்படியான நிலையில் இந்தப் படங்களுடனான போட்டியை தவிர்க்கும் பொருட்டு இந்தப் படத்தை மே அல்லது ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தக் லைஃப்
இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார், துல்கர் சல்மான் ,த்ரிஷா, ஜெயம் ரவி, ஜோஜூ ஜார்ஜ், ஐஷ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சைபீரியாவில் நடைபெற்று வருகிறது.

மேலும் காண

Source link