ஜெயிலர் படம் குறித்து முதல் விமர்சனமாக இசையமைப்பாளர் அனிருத் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். அவரது இசையில் தமன்னா குத்தாட்டம் போட்ட காவாலா பாடல் பெரும் வெற்றியை பெற்று பட்டித்தொட்டி எங்கும் பாடும் அளவுக்கு பரவியுள்ளது.
வருகின்ற 10ஆம்தேதி படம் வெளியாக உள்ள நிலையில், கடந்த 2ஆம் தேதி ஜெயிலர் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
இந்த நிலையில் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பரவலாக யோசித்துக்கொண்டிருக்கும் போது, அனிருத் விமர்சனத்தை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Jailer 💥💥💥🏆🏆🏆🙌🙌🙌
— Anirudh Ravichander (@anirudhofficial) August 4, 2023
அதில் ஜெயிலர் என குறிப்பிட்டு, கோப்பையை பதிவிட்டுள்ளார். அதாவது, படம் வெற்றி பெற்றுவிட்டதாக இப்போதே தனது விமர்சனத்தை டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதனை ரசிகர்கள் பலர் கமண்ட் மூலம் கொண்டாடி வருகின்றனர்.