Isha Mahashivaratri Festival How To Participate Free Details Inside isha yoga


கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இலவசமாக பங்கேற்கலாம். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இரவு அன்னதானம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில்,  வரும் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை  கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் மஹா சிவராத்திரி விழாவில் நேரடியாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். 
இவ்விழாவில் இலவசமாக பங்கேற்க விரும்புவோர் https://isha.sadhguru.org/mahashivratri/ta/attend-in-person/ அல்லது isha.co/tnmsr2024-VAT என்ற லிங்கை பயன்படுத்தி உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை கொடுத்து இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். நேரில் பதிவு செய்ய விரும்புவோர், மார்ச் 8 -ஆம் தேதி அன்று கோவை ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பதிவு மையத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வருபருக்கு முன்னிரிமை என்ற அடிப்படையில் இந்த பதிவு நடைபெறும்.
ஈஷாவில் 30-ஆம் ஆண்டாக சத்குரு முன்னிலையில் கொண்டாடப்படும் இவ்விழாவில் மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த மஹா சிவராத்திரி விழாவில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மஹாலிங்கம், பஞ்சாபி இசை கலைஞர் குர்தாஸ் மான், கர்நாடக இசை கலைஞர் சந்தீப் நாராயணன், பாலிவுட் இசை கலைஞர்கள் ப்ரித்வி கந்தர்வ், ரஞ்ஜித் பட்டரசர்ஜி, பாரடெக்ஸ் (தனிஷ்க் சிங்) உள்ளிட்ட தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். 
ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், சைனீஸ், மராத்தி,போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. கோவை தவிர்த்து மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாகர்கோவில் உட்பட தமிழ்நாட்டில் 36 இடங்களில் இவ்விழா நேரலை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
மேலும் படிக்க 
Minister Udhayanidhi Case: அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் மீதான சனாதன வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்
போதையில்லா சமூகம் வேண்டும்: புதுவையில் சிறுமி கொலை விவகாரத்தில் கொந்தளிக்கும் தலைவர்கள்!

மேலும் காண

Source link