ஐ.பி.எல் 2024:
ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கிறது. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் முதல் போட்டியில் விளையாட உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதன்படி மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது. முன்னதாக, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி விளையாட இருக்கிறார்.
முன்னதாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை. இதனிடையே அவருக்கு குழந்தை பிறந்ததால் லண்டனில் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இருந்தார். இச்சூழலில் தான் நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் களம் இறங்க உள்ள விராட் கோலி இந்த ஆண்டு நடைபெறும் முதல் ஐ.பி.எல் போட்டியிலேயே சாதனை ஒன்றை செய்ய காத்திருக்கிறார்.
அதிக அரைசதம் குவித்த இந்தியர்கள்:
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை அதிக அரைசதம் குவித்த வீரர்கள் என்ற பெருமையை இரண்டு வீரர்கள் பெற்றிருக்கின்றனர். அதாவது இந்திய வீரர்களில் ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா 50 அரைசதங்கள் குவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த சீசனில் முதல் போட்டியில் ஒரு அரைசதம் விளாசினால் அதிக அரைசதம் விளாசிய வீரர் என்ற பெருமையை தனக்கானதாக மாற்றிக்கொள்வார் . நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த விராட் கோலி முதல் போட்டியில் எப்படி விளையாடுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஐபிஎல்லில் அதிக அரைசதங்கள் அடித்த இந்திய வீரர்கள்:
விராட் கோலி (50)
ஷிகர் தவான் (50)
ரோகித் சர்மா (42)
சுரேஷ் ரெய்னா (39)
கவுதம் கம்பீர் (36)
ஐபிஎல் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் (இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள்):
டேவிட் வார்னர் (61)
விராட் கோலி (50)
ஷிகர் தவான் (50)
ரோகித் சர்மா (42)
ஏபி டி வில்லியர்ஸ் (40)
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!
மேலும் காண