INDW vs AUSW 3rd T20I: டி20 கோப்பை யாருக்கு? ஆஸ்திரேலியாவுடன் இந்திய மகளிர் அணி இன்று பலப்பரீட்சை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அதாவது ஜனவரி 9ஆம் தேதி இரவு 7 மணிக்கு நவி மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே டெஸ் மற்றும் ஒருநாள் தொடர் முடிந்து விட்டது. நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியா மகளிர் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்தது. அதுமட்டும் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக ஆஸ்திரேலியா மகளிர் அணியை வென்றுள்ளது.

அதன் பின்னர் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை ஒயிட் – வாஸ் செய்தது. அதாவது மூன்று போட்டிகளும் ஆஸ்திரேலியா மகளிர் அணி வெற்றி பெற்றது. இதில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதேபோல் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இதற்கடுத்து தொடங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணியை இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்று கம்பேக் கொடுத்தது மட்டும் இல்லாமல் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகித்தது.  ஆனால் இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் தற்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.

எனவே டி20 தொடரை வெல்லும் அணி என்பதை முடிவு செய்யும் மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் தங்களது முழு பலத்தினை வெளிப்படுத்தி தொடரை வெல்ல முயற்சிக்கும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை முழுமையாக வென்று விட்டதால், இந்திய அணி டி20 தொடரை வெல்ல கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்திய மகளிர் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), ரிச்சா கோஷ்(விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், அமன்ஜோத் கவுர், ஷ்ரேயங்கா பாட்டீல், டிடாஸ் சாது, ரேணுகா தாகூர் சிங், மன்னத் காஷ்யப், யாஸ்திகா, யாஸ்திகா சைகா இஷாக், கனிகா அஹுஜா, மின்னு மணி

ஆஸ்திரேலியா மகளிர் அணி: அலிசா ஹீலி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), பெத் மூனி, தஹ்லியா மெக்ராத், எலிஸ் பெர்ரி, ஆஷ்லீக் கார்ட்னர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், கிரேஸ் ஹாரிஸ், அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், மேகன் ஷட், ஹீதர் கிரஹாம், ஜெஸ் ஜோனாசென், அலனா கிங்சென், டார்சி பிரவுன்

Source link