IND VS ENG 5th TEST 1st Innings Ashwin Clapping And Giving The Moment To Kuldeep To Cherish Forever For The Five-wicket Haul | IND VS ENG 1st Innings: ”நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை” களத்தில் பாசத்தைப் பொழிந்த அஸ்வின்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று அதாவது மார்ச் மாதம் 7ஆம் தேதி தர்மசலாவில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 4 விக்கெட்டுகளும் ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 
இந்த போட்டி அஸ்வினின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆன பின்னர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்திய அணியை பெவிலியன் நோக்கி அஸ்வினை வழிநடத்திச் செல்லச் சொன்னார். ஆனால் அஸ்வின் குல்தீப்பை அணியை வழி நடத்திச் சொன்னார். ஆனால் குல்தீப்பும் முகமது சிராஜும் அஸ்வினை வழிநடத்திச் செல்லச் சொன்னார்கள். ஆனால் அஸ்வின் குல்தீப்பிடம் பந்தைக் கொடுத்து குல்தீப்பை வழிநடத்திச் செல்லச் சொன்னார். இந்த காட்சி தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய அணி வீரர்கள் களத்தில் அன்பை மாறி மாறி பொழிந்தது ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. 
குல்தீப் மற்றும் சிராஜ் ஆகியோர், அஸ்வின் ஒரு சீனியர் வீரர், இந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார், இந்த போட்டி அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டி என்பதால் அஸ்வினை வழிநடத்திச் செல்லச் சொன்னார்கள். ஆனால் குல்தீப் இந்த போட்டியில் முக்கியமான 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். வளர்ந்து வரும் இளம் வீரர் என்பதால் குல்தீப்பை வழிநடத்திச் செல்லச் சொன்னார். இந்த காட்சி சீனியர் மீது ஜூனியரும் ஜூனியர் மீது சீனியரும் வைத்துள்ள மரியாதை அணியில் உள்ள ஒற்றுமையை வெளிக்காட்டியுள்ளது. 

What a beautiful moment. – The respect between Junior & Senior makes it iconic: Ashwin 🤝 Kuldeep. pic.twitter.com/ODShOoxa3O
— Johns. (@CricCrazyJohns) March 7, 2024

இறுதியில் குல்தீப் அணியை வழிநடத்திச் சென்றார்.  அப்போது அஸ்வின் கைதட்டி குல்தீப்பை பாராட்டினார். 

Source link