IND vs ENG: தர்மசாலாவில், அஸ்வினுக்கும் பேர்ஸ்டோவுக்கும் 100வது டெஸ்ட்.. இது 147 வருட வரலாற்றில் மூன்றாவது முறை!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தொடரில் இதுவரை 4 போட்டிகள் விளையாடப்பட்டு, அதில் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி வருகின்ற மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் தனிச் சாதனை ஒன்று படைக்க இருக்கிறது. அதன்படி, 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மூன்றாவது முறையாக மட்டுமே நடக்கிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

அஸ்வினுக்கும் பேர்ஸ்டோவுக்கும் 100வது டெஸ்ட் போட்டி:

தரம்சாலா டெஸ்ட் போட்டி இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவின் 100வது டெஸ்ட் போட்டியாகும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரு அணி வீரர்களும் ஒரே போட்டியில் 100வது டெஸ்டில் விளையாடுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு 2013 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் இது நடந்தது.

இது 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் போட்டியில் நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்தின் அலஸ்டர் குக்கும், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க்கும் இணைந்து தங்களது 100வது டெஸ்ட் போட்டியை விளையாடினர். அதேபோல், முதல் முறையாக கடந்த 2006ம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியில் இது நடந்தது. அதில், தென்னாப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் மற்றும் நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளெமிங் இணைந்து 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடினர்.

ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் வாழ்க்கை:

கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் இந்திய அணிக்கான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ரவிசந்திரன் அஸ்வின் இதுவரை இந்திய அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் 187 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 23.91 சராசரியில் 507 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 500 விக்கெட்களை எடுத்ததன் மூலம் இந்தியாவிற்காக அதிக விக்கெட்களை எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 35 முறை ஒரு இன்னிங்ஸில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தவிர, 140 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள அஸ்வின், ​​26.47 சராசரியில் 5 சதங்கள், 14 அரைசதங்களுடன் 3309 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்டில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 124 ரன்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து தொடரின் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 30.41 சராசரியில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஜானி பேர்ஸ்டோவ் டெஸ்ட் வாழ்க்கை:

ஜானி பேட்ஸ்டோவ் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36.42 சராசரியில் 5974 ரன்கள் எடுத்துள்ளார். இதில், இவர் 12 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் அடித்துள்ளார். மே 2012 இல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பேர்ஸ்டோ தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. பேர்ஸ்டோவ் பெரும்பாலான போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் மோசமான பார்முடன் திணறி வரும் ஜானி பேர்ஸ்டோவ் 4 போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 21.25 சராசரியில் 170 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

Source link