Ilayaraja : கடவுளை கண்ணு முன்னாடி காட்டுனாதான் நம்புவியா? மேடையில் கமலை அட்டாக் செய்த இளையராஜா!

பகவான் ரமண மகரிஷியே தனக்கு கடவுள் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா

"கடவுள் இருக்கிறாரா இல்லையா. நம்பலாமா நம்பக் கூடாதா"என்கிற கேள்வி எழாத ஒரு மனிதன் கூட இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. இந்த புகழ்பெற்ற கேள்விக்கு உலகத்தில் பல மேதைகள் பல விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் உலகநாயகன் கமல்ஹாசனின் விளக்கம் உடனே  நினைவுக்கு வரலாம். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று கேட்டால். "இருந்தால் நல்லா இருக்கும். இவருதான் கடவுள் அப்டினு கண்ணு முன்னாடி காட்டுங்க நான் நம்புறேன்" என்பது தான் கடவுள் பற்றி கமல்ஹாசனின் பார்வை.

கமல்ஹாசனின் பதிலுக்கு சவால்விடக் கூடிய ஒருவர் என்றால் அது இளையராஜாவாக தான் இருக்க முடியும். அப்படி மேடை ஒன்றில் கமல்ஹாசனின் கருத்துக்கு இளையராஜா எதிர் கருத்து தெரிவித்த தருணத்தை நினைகூறலாம்.

கமலுக்கு பதில் சொன்ன இளையராஜா

நிகழ்ச்சி ஒன்றில் யுவன் ஷங்கர் ராஜா தனது தந்தை இளையராஜாவிடம் கடவுளை நீங்கள் நேரில் பார்த்தால் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று கேள்வி கேட்கிறார். இதற்கு பதில் அளித்த இளையராஜா " கடவுள நான் எப்போ பாக்கல. கடவுள் கிட்ட கேட்க எனக்கு எந்த கேள்வியும் கிடையாது. எனக்கு ரொம்ப கஷ்டத்த கொடுத்தா நான் கஷ்டப்படுறத பார்த்து நீ சந்தோஷமா இருக்கியா எனக்கு அது போதும் அப்டினு எடுத்துப்பேன். நமக்குள்ள இல்லாத கடவுளா வெளிய இருக்க போறாரு. நம்ம மன்சுதான் கடவுள். அத நம்மால பாக்க முடியாது. கடவுள் என்ன எதிரிட்டு காணக் கூடிய விஷயமாவா இருப்பாரு.

நமக்கு அறிவு இருக்குனு தெரியுது ஆனா அறிவு என்ன கண்ணால பார்க்கக் கூடிய பொருளா? அறிவையே கண்ணால பார்க்க முடியாதப்போ அறிவால உணர்ந்துகொள்ளக் கூடிய கடவுள் நமக்கு கண் முன் தோன்ற வேண்டும் என்று கேட்பது கமல்ஹாசன் கேட்பது போல் இருக்கிறது. என்ன மேடையில வச்சுகிட்டு இவரை கடவுள் என்று சொல்லுங்கள் நான் கடவுளை நம்புகிறேன் என்று கமல் சொல்கிறார்.

அப்போ கடவுள கண்ணால காட்டுனா மட்டும்தான் நம்புவியா? அப்போ  இவ்ளோ உருவம் இருக்கே அதுல ஒன்ன கடவுள்னு சொல்லிட்டு போயேன். உனக்கு அறிவு இருக்கானு கேட்டா என்ன சொல்லுவ. அறிவு இருக்குனு எந்த அறிவ வச்சு சொல்ற. நம்மளுடைய சொந்த அறிவையே எதிரிட்டு பார்க்க முடியாத போது கடவுள் என்பது எதிரிட்டு பார்க்கக் கூடிய ஒரு விஷயம் இல்லை. அறிவே கடவுள். அன்பே கடவுள். கடவுளுக்கு ஒரு வேலை கற்பிக்கிறது தப்பு.

ரமண மகரிஷிதான் எனக்கு கடவுள்

எனக்கு கடவுள் என்றால் அது பகவான் ரமண மகரிஷிதான். நமக்காக மண்ணாக போகக் கூடிய இந்த மனித சரீரம் கொண்டு பிறந்தவர் அவர். ஆறு முறை அவருக்கு அருவை சிகிச்சை பண்ணிருக்காங்க அவர் முகத்துல ஒரு சின்ன அசைவுகூட இல்ல. பதினாறு வயசுல தவத்துல உட்காரும்போது அவர் உடம்புல கரையான் புற்று முளைச்சது. அவர் தன்னோட உடம்புலயே இல்ல. நமக்கு மெய் ஞானத்தை உணர்த்துவதற்கான பொய்யான ஒரு மனித உடலில் வந்து போன கடவுள் அவர். நான் ஒவ்வொரு நாளும் அவரை பார்க்கிறேன். அவர் எனக்குள்ள தான் இருக்காரு. இங்க இருக்க ஒவ்வொருத்தர் உள்ள அவர் இருக்கார். ஒவ்வொரு மனிதனும் முழுமையானவன் என்று சொன்னவர் அவர் ஒருவர்தான். எனக்கு என்ன வேணுமோ கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். யுவன் , கார்த்திக் , பவதா உங்க மூனு பேரையும் எனக்கு கொடுத்திருக்கிறார். " என்று இளையராஜா  பேசினார்.

Source link