எந்த நாட்டுடைய பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்தது என ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு தெரிவிக்கிறது. ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. இந்த குறியீடானது 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை மதிப்பீடு செய்து வெளியிடுகிறது.ஒவ்வொரு நாட்டவரும், எத்தனை நாடுகளுக்கு முன் விசா இன்றி பயணம் செய்யலாம் அல்லது அந்த நாடுகளுக்கு சென்ற பின் விசா எடுத்துக்கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டாக அறியப்படுகிறது.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான பாஸ்போர்ட் குறியீட்டில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக சிங்கப்பூர், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான், ஃப்ரான்ஸ், உள்ளிட்ட நாடுகளின் பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. இந்த 6 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளால் 194 நாடுகளுக்கு முன் விசா இன்றி பயணம் செய்யலாம் என்பதால் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Biggest Stars: சூரியனை விட ஆயிரம் மடங்கு பெரிய நட்சத்திரங்கள் பால்வெளியில் உள்ளன – எவை என்று தெரியுமா?
இரண்டாவதாக தென் கொரியா, ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டால் 193 நாடுகளுக்கு முன் விசா இன்றி பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் சக்தி குறைந்த பாஸ்போர்ட் உள்ள நாடாக ஆஃப்கானிஸ்தான் உள்ளது. இந்த நாட்டுக்கு 28 நாடுகள் மட்டுமே முன் விசா இன்றி பயணம் செய்யலாம் அனுமதியளித்துள்ளது. இந்தியா 80 வது இடத்தில் உள்ளதாக இந்த குறியீடு தெரிவிக்கிறது. இந்திய குடிமக்கள் 60 நாடுகளுக்கு முன் விசா அனுமதி இன்றி பயணம் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Also Read: Migratory Birds: கோடைகாலத்தில் இந்தியாவுக்கு வருகைதரும் அழகிய பறவைகள்…
Published at : 16 Feb 2024 06:45 AM (IST)
மேலும் காண