இந்திய ரயில்வே, வெப்ப அலை குறித்தான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் எந்த பகுதி வெப்ப அலையால் பாதிக்கப்படும், எந்த தினங்களில் வெப்ப அலை வீசக்கூடும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன எனப்து குறித்தான தகவலை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

ரயில்வே தெரிவித்துள்ளதாவது,

உள் கர்நாடகா, ராயலசீமா, மேற்கு வங்காளம் ஆகிய அடுத்த 5 நாட்களில் வெப்ப அலை வீசக்கூடும்

தெற்கு ரயில்வே தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும்

ஜார்கண்ட், பீகார், தெலுங்கானா, கிழக்கு உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 24-27 வரை வெப்ப அலை வீசக்கூடும்.

ஏப்ரல் 27 அன்று கொங்கன் பகுதியில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 23 முதல் 27 வரை கர்நாடகா கேரளா மற்றும் மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும்.

ஏப்ரல் 23 முதல் 27 வரை தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால் மற்றும் கேரள & மாஹே மீது தெற்கு ரயில்வே வெப்ப வானிலையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில் நிலையங்கள், நடைமேடைகள் மற்றும் ரயில் பெட்டிகளில் குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் எனவும் நிழல்கள், குளிர்ந்த கூரைகள் போன்றவற்றின் மூலம் குளிரூட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.