Gujarat Attacks Foreign Students Over Namaz Inside Gujarat Hoste 5 Injured | பல்கலைக்கழக விடுதியில் தொழுகை செய்த இஸ்லாமிய மாணவர்கள்! கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்


Gujarat: விடுதியில் தொழுகை செய்த  இஸ்லாமிய மாணவர்களை மர்ம கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
”இதுதான் தொழுகை செய்ய இடமா?”
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில்  ஆப்பிரக்கா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்டட நாடுகளைச்  சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.  அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இப்பல்கலைக்கழகத்தில் நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பல மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அதாவது, இந்த பல்லைக்கழகத்தை சுற்றி எந்த ஒரு மசூதியும் இல்லை. தற்போது, ரம்ஜான் மாதம் என்பதால், விதியில் தங்கி இருக்கும் இஸ்லாமிய மாணவர்கள் விடுதியில் ஒரு இடத்தில் கூடி, இரவில் தொழுகை செய்கின்றனர். நேற்று விடுதியில் ஒரு இடத்தில் இஸ்லாமிய மாணவர்கள் சிலர் கூடி தொழுகை செய்துள்ளனர்.
அப்போது, வெளியில் இருந்து விடுதிக்குள் வந்த சில கும்பல், தொழுகை செய்துக் கொண்டிருந்த இஸ்லாமிய மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. மாணவர்களை தாக்கியதை பார்த்த பாதுகாவலர் இதனை தடுக்க முயன்றார். அப்போது, அந்த கும்பல் பாதுகாவலரை மீறி மாணவர்களின் அறைகளை அடித்து உடைத்ததோடு, உள்ளே இருந்த லேப்டாப், செல்போன், இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியது. 
“உங்களை தொழுகை செய்ய யார் அனுமதித்தது. இது தொழுகை செய்ய இடமா? என்று கேட்டு, இஸ்லாமிய மாணவர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர்.மர்ம கும்பலின் தாக்குதலில் வெளிநாட்டு மாணவர்கள் ஐந்து பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இஸ்லாமிய மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல்:
இஸ்லாமிய மாணவர்களை அடித்த கும்பல், அங்கிருந்த தப்பிச் சென்றுவிட்டது.  பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  ஒருவரை அடையாளம் கண்டுள்ளோம். 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோக்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுக்கள் இருகிறது” என்றார். 
ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். இதுகுறித்து  அவர் கூறுகையில், “அவமானம். இஸ்லாமியர்கள் அமைதியாக தொழுகை செய்துக் கொண்டிருக்கும்போது உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் இதில் தலையிடுவார்களா? இஸ்லாமியர்கள் மீது காட்டப்படும் வெறுப்பு இந்தியாவின் நல்லெண்ணத்தை அழிக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும் காண

Source link