ACTP news

Asian Correspondents Team Publisher

Governor Salem Visit: இன்று சேலம் வரும் ஆளுநர் ரவி: கருப்புக்கொடியுடன் காத்திருக்கும் மாணவ அமைப்பினர்! பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பெரியார் பல்கலைக்கழகத்தின் நடைபெறும் பேராசிரியர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சேலம் வருகை தருகிறார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் 11:30 மணிக்கு சேலம் வருகை தரும் தமிழக ஆளுநர், சேலம் விமான நிலையத்திலிருந்து கார் மூலமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வருகை தர உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாணவ அமைப்பினர் கருப்பூர் டோல்கேட்டில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு விதிகளை மீறி வர்த்தக ரீதியான நிறுவனத்தை தொடங்கியதாக எழுந்த புகாரில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தரும் ஆளுநர், பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் உள்ளிட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பேராசிரியர்களை நேரில் சந்தித்து முறைகேடு புகார் தொடர்பாக விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்று நடைபெறும் ஆளுநர் சந்திப்பை கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலம் மாநகரில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் "பெரியார் பல்கலைக்கழகத்தின் ஊழல் வழக்கில் உள்ள துணைவேந்தருக்கு துணை போகும் ஆளுநரை கண்டிக்கிறோம்" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக ஆளுநர் வருகையை முன்னிட்டு சேலம் விமான நிலையத்திலிருந்து பெரியார் பல்கலைக்கழகம் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது மட்டுமின்றி சென்னையில் இருந்து சேலம் வருகை தரும் தமிழக ஆளுநர் வரும் விமானத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Source link