தினமும் 100 கிலோ மீட்டர் சவாரி:
பெங்களூருவில் மிகவும் பிரபலமான நபராக இருந்தவர் அனில் கட்சூர். 45 வயதான இவர் தினமும் சுமார் 100 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டியதன் மூலம் அனைவருக்கும் உத்வேகமாக விளங்கியவர். தொடர்ச்சியாக 42 மாதங்களாக 100 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி அனைவரிடமும் பாராட்டைப் பெற்றார். இதுவரை மொத்தம் 1,250 ரைடுகள் முடித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய 1,250-வது சவாரியை அண்மையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இச்சூழலில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனில் கட்சூர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்த சூழலில், பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தன்னுடைய இரங்கல் செய்தியை சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் நேற்று பதிவு செய்தார். மேலும் பலரும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Saddened to know about the passing away of cyclist Anil Kadsur.Anil, fondly called the Century Rider for riding 100km daily for the last 1,500 days, was well-known figure in Bengaluru South & a fitness icon for many youngsters like me. Many of us would have even seen him ride… pic.twitter.com/jr7jz3frJS
— Tejasvi Surya (@Tejasvi_Surya) February 3, 2024
அனைவருக்கும் உத்வேகம் அளித்தவர்:
அதன்படி அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “அனில் கட்சூர் காலமடைந்ததை அறிந்து வருத்தமடைந்தேன். கடந்த 1,500 நாட்களாக தினமும் 100 கீ.மீ சவாரி செய்ததற்காக ‘செஞ்சுரி ரெய்டர்’ என்று அன்புடன் அழைக்கப்படும் அனில் கட்சூர், பெங்களூரு தெற்கு பகுதியில் நன்கு அறியப்பட்ட நபராகவும், என்னைப் போன்ற பல இளைஞர்களுக்கு ஃபிட்னஸ் ஐகானாகவும் இருந்தார். அவர் நகரத்தைச் சுற்றி வருவதை நம்மில் பலர் பார்த்திருப்போம்.
1000 நாட்களுக்கும் மேலாக தினமும் 100 கிமீ சைக்கிள் ஓட்டிய அவரது குறிப்பிடத்தக்க சாதனைக்காக புகழ் பெற்றார். பெங்களூருவில் சைக்கிள் ஓட்டுதலில் தன்னை ஒரு அடையாளமாக மாற்றினார். அவரது அர்ப்பணிப்பு சாதனைகளை படைத்தது, ஏராளமான நபர்களுக்கு சைக்கிள் ஒட்டுவதற்கான உத்வேகத்தை அளித்தது” என்று கூறியுள்ளார். இதனிடையே, தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்த அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: India vs England 2nd Test: 2 வது டெஸ்ட்…இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்கு வைத்த இந்திய அணி!
மேலும் படிக்க: India vs England:11 மாதங்களுக்கு பிறகு.. டெஸ்ட் போட்டியில் சதம்! சுப்மன் கில் அசத்தல்!
மேலும் காண