பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

देश के अन्नदाता किसानों के लिए मोदी सरकार अभि़शाप है।

लगातार झूठी ‘मोदी की गारंटी’ के चलते ही पहले 750 किसानों की जान गई और अब कल 1 किसान ने शहादत दी और 3 रबर बुलेट से अपनी आँखों की रोशनी खो बैठे हैं।

मोदी सरकार ने किसानों से किया दुश्मनों जैसा व्यवहार,

केवल कांग्रेस… pic.twitter.com/v0zKfzX7OW

— Mallikarjun Kharge (@kharge) February 17, 2024

விவசாயிகளின் கோரிக்கைகள நிறைவேற்றுவது தொடர்பாக நடைபெற்ற, மத்திய அரசு உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று காங்கிரஸ் பாரத் பந்தில் கலந்துக்கொண்டது. விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்படுவது, தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ள பதிவில், “நாட்டின் விவசாயிகளுக்கு மோடி அரசு சாபக்கேடு. தொடர்ந்து பொய்யான மோடி உத்தரவாதத்தால் முதலில் 750 விவசாயிகள் உயிரிழந்தனர், தற்போது நேற்று 1 விவசாயி உயிரிழந்தார். மேலும் 3 பேர் ரப்பர் தோட்டாக்களால் கண்பார்வை இழந்துள்ளனர். மோடி அரசு விவசாயிகளை எதிரிகள் போல் நடத்துகிறது. அவர்களுக்கு எம்எஸ்பி என்ற சட்டப்பூர்வ உரிமையை காங்கிரஸ் மட்டுமே பெற்றுத் தரும்!” என தெரிவித்துள்ளார்.

மேலும், தொடர் விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் காய்கறி விலை உயரும் அபாயம் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், தற்போது வரை விலைவாசி எதுவும் உயரவில்லை என அங்கு இருக்கும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 15 நாட்களாக கேரட் விலை மட்டும் சற்று உயர்ந்துள்ளதாகவும், இப்படியே போராட்டம் தொடர்ந்தால் கடுமையான விலை உயர்வு சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் லாரிகள் எந்த தடையும் இல்லாமல் வருவதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை கைவிடும்போது, வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணியாக செல்வதாக விவசாயிகள் அறிவித்தனர். இதனால், 2021 ஆம் ஆண்டு சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என டெல்லி எல்லையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு வேலிகள், கொக்கி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்டெய்னர்கள் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, வாகனங்களின் டயர்களை பஞ்சராக்குவதற்கு சாலைகளில் ஆணிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பு எல்லையில், 64 கம்பெனி துணை ராணுவப்படையினரும், 50 கம்பெனி ஹரியானா போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, காக்கர் ஆற்றுப்படுகையில் பள்ளங்களும் தோண்டட்டுள்ளன. ட்ரோன்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இவற்றை எல்லாமும் மீறி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் அடங்குவர்.