EPS campaign lok sabha election 2024 for admk candidate in AaraniThiruvannamalai | EPS: நான் விவசாயி; விவசாயி யாருக்கும் பயப்படமாட்டார்

நான் ஒரு விவசாயி ,விவசாயிகள் யாருக்கும் பயப்படமாட்டார்கள் என ஆரணியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசினார். 
ஆரணியில் அதிமுக தேர்தல் பரப்புரை
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து ,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இபிஎஸ் பேசியதாவது, “முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார், பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என, ஆனால் அதிமுக தான் 40 தொகுதிகளையும் வெற்றி பெறும்”
“அதிமுக கட்சியை  ஸ்டாலின் உடைப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதிமுக தொண்டர்கள் உள்ளவரை இந்த இயக்கத்தை உடைக்க முடியாது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. ஒரு ஸ்டாலின் அல்ல, ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் இயக்கத்தை உடைக்க முடியாது” என்றார்
நான் ஒரு விவசாயி:
”விவசாயம் என்பது புனிதமான தொழில் அதை கொச்சைப்படுத்தி பேச வேண்டாம். என்னை பற்றி பேசுவதாக கூறி விவசாயிகளை கொச்சைப்படுத்தாதீர்கள். அதிமுக ஆட்சியில் இருந்தபொழுது விவசாயிகள் செழிப்பாக இருந்தார்கள். விவசாயிகளுக்கு 9,500 கோடி ரூபாய் பெற்றுத் தந்த ஒரே அரசு அதிமுக அரசு. நான் ஒரு விவசாயி ,விவசாயிகள் யாருக்கும் பயப்படமாட்டார்கள் 
ஒரு திட்டத்தை அறிவித்த ஸ்டாலின் அதற்கு ஒரு குழுவை நியமிக்கிறார். 52 திட்டங்களை அறிவித்தார் அதற்கு 52 குழுக்கள் அமைத்துள்ளார் இது திராவிட மாடல் ஆட்சி அல்ல, அல்ல குழு ஆட்சி” என பொதுமக்கள் என கூறுகின்றனர்.
”திமுகவில் வேறு யாரும் இல்லையா?”
2ஜி யில் ஒரு லட்சத்து 2000 கோடி ரூபாய் ஊழல் செய்து, இந்தியாவிற்கே தலைகுனிவு ஏற்படுத்திய ஒரே கட்சி திமுக கட்சி.
கலைஞரின் ஆட்சி காலத்தில் அரிசியில் ஊழல், பூச்சி மருந்தில் ஊழல் என எண்ணற்ற ஊழல்களை கொண்டுள்ள ஒரே கட்சி திமுக கட்சி என்றும் திமுக கட்சி குடும்ப கட்சி என்றும், அதில் கலைஞர் அவருடைய மகன் ஸ்டாலின் அவருடைய மகன் உதயநிதி அடுத்தபடியாக அவருடைய மகன் வர உள்ளார் என்றும் திமுகவில் வேறு யாரும் இல்லையா?, இந்த திமுகவின் கட்சி கம்பெனி போன்று இயங்கி வருகிறது எனவும் திமுகவை குற்றம் சாட்டி எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

Published at : 11 Apr 2024 09:03 PM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link