England Announce XI For 2nd Test Vs India James Anderson Returns Debut For Shoaib Bashir | IND Vs ENG: நாளை 2வது டெஸ்ட்! இங்கிலாந்து அணிக்காக மீண்டும் களமிறங்கும் ஆண்டர்சன்

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மீண்டும் திரும்பிய ஜேம்ஸ் ஆண்டர்சன்:
இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இந்த போட்டியில் கூடுதல் கவனத்துடன் ஆடும்.
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த போட்டியில் மீண்டும் களமிறங்க உள்ளார்.

We have named our XI for the second Test in Vizag! 🏏🇮🇳 #INDvENG 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 | #EnglandCricket
— England Cricket (@englandcricket) February 1, 2024


இங்கிலாந்து அணியின் விவரம் பின்வருமாறு:
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், ரெஹன் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
அறிமுக வீரராக சோயிப் பஷீர்:
இங்கிலாந்து அணிக்காக கடந்த டெஸ்ட் போட்டியில் சுழலில் அசத்திய டாம் ஹார்ட்லி அறிமுக வீரராக களமிறங்கினார். நாளை தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக சோயிப் பஷீர் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார். 20 வயதே ஆன சோயிப் பஷீர் வலது கை சுழற்பந்துவீச்சு மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். கடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கி அசத்திய டாம் ஹார்ட்லியை போல சோயிப் பஷீரும் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவாரா? என்பது இந்த போட்டியில் தெரிய வரும்.
இந்திய அணி கடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடியும், இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்சில் விக்கெட்டை கைப்பற்ற தவறியதால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. மேலும், இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது பின்னடைவாக உள்ளது. விராட் கோலி நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியிலும் ஆடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் 2வது இன்னிங்சில் சிறப்பாக செயல்படாதது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால், இந்த போட்டியில் இந்திய அணி அந்த தவறை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: IPL 2024: ஆர்சிபி அணியில் இணையும் ஷமர் ஜோசப்..? டாம் கர்ரனுக்கு பதிலாக ஐபிஎல்லில் அறிமுகமாகும் வாய்ப்பு!
மேலும் படிக்க:  ICC Test Rankings: ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தை அலங்கரிக்கும் அஸ்வின்! ஆல்-ரவுண்டர் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் ஜடேஜா!

Source link