DMK Campaign MK Stalin announcement Lok Sabha Election 2024 Campaign February 16,17,18


வரும் மக்களவைத் தேர்தலுக்காக திமுக வரும் பிப்ரவரி 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கழக முன்னணியினர் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரையில் பங்கேற்று அதிமுகவை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர்.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் 2024-இல் கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, கழக முன்னணியினர் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க கழகத் தலைவரின் குரலாக பிப்ரவரி 16,17 மற்றும் 18 ஆகிய நாட்களில் கீழ்கண்டவாறு நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களை பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், பகுதி-ஒன்றிய-நகர-பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைச்செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டங்களாக நடத்திட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 
நாள் : 16-2-2024 (வெள்ளிக்கிழமை)
சிவகங்கை – இ.பெரியசாமி
திருநெல்வேலி – கனிமொழி கருணாநிதி, எம்.பி.
விழுப்புரம் – ஆர்.எஸ்.பாரதி
தூத்துக்குடி – பொன் முத்துராமலிங்கம்
கடலூர் – எஸ்.எஸ்.சிவசங்கர்
திருபெரும்புதூர் – மா.சுப்பிரமணியன்
ஈரோடு – அன்பில் மகேஸ் பொய்யாமொழி
நாமக்கல் – தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி.,
கன்னியாகுமரி – திண்டுக்கல் ஐ.லியோனி
மயிலாடுதுறை – பேராசிரியர் சபாபதிமோகன்
திருவண்ணாமலை – முனைவர் கோவி.செழியன்
 

மேலும் காண

Source link