Crime: முதலிரவில் அடம்பிடித்த புது மாப்பிள்ளை! ஷாக்கான பெண் வீட்டார்! மனைவி எடுத்த அதிரடி முடிவு!


<p>குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு 24 வயதில் ஸ்டெர்லின் என்ற மகள் உள்ளார். இவருக்கும் கட்டாத்துறை கடமனாங்குழியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரவீன் சூர்யா (வயது 28) என்பவருக்கும் 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது ஸ்டெர்லினின் தந்தை சந்திரசேகர் பெயரில் இருக்கும் வீடு மற்றும் விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை மாப்பிள்ளைக்கு சீர்வரிசையாக கொடுப்பதாக வாக்கு கொடுத்துள்ளனர்.</p>
<p>ஆனால் திருமணத்தின் போது ஏற்பட்ட பண நெருக்கடியால் விலை உயர்ந்த இரு சக்கர வாகனம் வாங்கி தர முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் திருமணம் நல்லப்படியாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் முதலிரவன்று மாப்பிள்ளை பிரவீன் சூர்யா தனக்கு விலை உயர்ந்த இரு சக்கர வாகனம் வாங்கித் தர வேண்டும் என்றும், வீட்டை தனது பெயருக்கு எழுதி தர வேண்டும் என்றும் மனைவி ஸ்டெர்லின் இடம் அடம் பிடித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் பிரவீன் சூர்யாவுடன் சேர்ந்து கொல்வேல் பகுதியை சேர்ந்த பிரியா, தந்தை ஜான் ராஜசெல்வன் (வயது 58), தாயார் கனகராணி (வயது 52), சகோதரர் பிரபின் சூர்யா (வயது 30) அவரது மனைவி ஜெனி ஆகியோர் ஒன்று சேர்ந்து வரதட்சனை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இது கையை மீறி போனதை உணர்ந்த ஸ்டெர்லின் அவரது தொல்லை தாங்காமல் கணவர் பிரவீன் சூர்யா அவரது தந்தை மற்றும் உறவினர்கள் மீது வரதட்சனை புகார் அளித்துள்ளார். மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பிரவீன் சூர்யா மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>

Source link