மரத்தடியில் தூங்கிய நபரின் சட்டைக்குள் புகுந்த பாம்பு… பரபரப்பு வீடியோ…

ஓய்வெடுப்பதற்காக மரத்தடியில் தூங்குவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி தூங்குவோர் மீது எறும்பு உள்ளிட்ட பூச்சிகள் சட்டைக்குள் புகுந்து கடிக்கும்.

 

இதனால், பூச்சி ஏதும் வராத இடமாக பார்த்து மரத்தடியில் படுத்து உறங்குவர். அப்படி, பார்த்து பார்த்து உறங்கினாலும், இப்படி ஒரு ஆபத்து வரும் என யாரும் நினைத்த‌து இல்லை.

 

ஆம், மரத்தடியில் படுத்து உறங்கிய நபரின் சட்டைக்குள் மிகப்பெரிய பாம்பு புகுந்தால் என்ன ஆகும்? சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த காணொலியில், மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்த நபரின் சட்டைக்குள் பாம்பு ஒன்று புகுந்து இருப்பது போன்று உள்ளது.

 

அந்த நபரின் சட்டை பொத்தான்களை அவிழ்த்த‌தும், பாம்பு மெதுவாக கீழே இறங்கி சென்றது.

 

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? தானாக நடந்த‌தா? அல்லது வீடியோ எடுப்பதற்காக சித்தரிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால், உண்மை விவரங்கள் ஏதும் இல்லாமல், பலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.