CM Stalin Speech: எப்போதும் மக்களை பற்றிதான் நினைப்பு, என்னை பற்றி அல்ல

அயலகத் தமிழர் மாநாட்டில் 13 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர்,”எனக்கு உடல்நலம் சரியில்லை என சிலர் பேசும்போது எனக்கு சிரிப்புதான் வந்தது. தமிழர்களும் தமிழ்நாடும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும்போது எனக்கு என்ன குறை இருந்துவிடப் போகிறது. எனக்கு எப்போதும் மக்களை பற்றிதான் நினைப்பு இருக்கிறது. என்னை பற்றி நான் நினைத்ததே இல்லை. நான் எப்போதும் மக்களுடன் இருப்பவன், என் சக்தியை மீறி உழைக்கிறேன்.” என பேசி வருகிறார்.

Source link