Cinema Headlines Today January 8th Tamil Cinema News Today Vijay Sethupathi Janhvi Kapoor Devara Yash Vijayakanth

இந்தி படிக்குறதை வேண்டாம்னு சொல்லல. திணிக்கவேண்டாம்னுதான் சொல்றாங்க – விஜய் சேதுபதி
மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். ஸ்ரீராம் ராகவண் இயக்கத்தில் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப்  நடித்து உருவாகி இருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் படிக்க
“கேஜிஎஃப்” நடிகர் யஷ் பிறந்தநாளில் சோகம் .. பேனர் வைத்த 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
கர்நாடகாவில் நடிகர் யஷ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேனர் கட்டிய 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தனது கலைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் யஷ். இவர் 2007 ஆம் ஆண்டு ஜம்பதா ஹுடுகி என்ற படம் மூலம் கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமானார். மேலும் படிக்க
பிப்ரவரியில் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டாவுக்கு நிச்சயதார்த்தமா.. உற்சாகத்தில் ரசிகர்கள்! 
தென்னிந்திய சினிமாவில் எக்ஸ்பிரஷன் குயின் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா மற்றும் டீன்ஸ் ஹார்ட் த்ரோப் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து ‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். திரை ரசிகர்களின் மத்தியில் லவ்வபிள் பேர் என அழைக்கப்படும் இவர்கள் இருவரும் பல மாதங்களாக டேட்டிங் செய்து வருகின்றனர் என்ற செய்திகள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க
விஜயகாந்துக்கு முதன்முறையாக சிலை திறப்பு.. மொட்டை அடித்து வணங்கிய தொண்டர்கள்!
தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் விஜயகாந்தின் மறைவு கவலையில் ஆழ்த்திய நிலையில், அரசியல் தலைவர், சினிமா கலைஞர்கள், ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு சென்று விஜயகாந்துக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள். விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் படிக்க
செங்கடலில் கொள்ளையர்களை துவம்சம் செய்யும் ஜூனியர் என்.டி.ஆர்.. தேவரா க்ளிம்ஸ் வீடியோ ரிலீஸ்!
பிரபல டோலிவுட் இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி திரைப்படம் தேவரா பாகம் 1(Devara Part-1). பிரபல பாலிவுட் நடிகையும் ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் இப்படத்தின் மூலம் முதன்முறையாக தென்னிந்தியாவில் அறிமுகமாகிறார். சைஃப் அலி கான் இப்படத்தில் வில்லனாகக் களமிறங்குகிறார். தெலுங்கு, தமிழ் மொழிகள் உள்பட பான் இந்திய படமாக இப்படம் உருவாகிறது. மேலும் படிக்க
இசையால் மனதை கிறங்கடிக்கும் ஹாரிஸ் ஜெயராஜூக்கு இன்று பிறந்தநாள்..!
தமிழ் சினிமாவில் இளையராஜா இருக்கலாம். ஏ. ஆர் ரஹ்மான் இருக்கலாம். ஆனால் ஹாரிஸ் ஜெயராஜுக்கு எப்போது ஒரு தனி இடம் ரசிகர்கள் மனதில் இருக்கிறது.  ஒரு படத்தில் ஹீரோவின் இண்ட்ரோ பாடலாக இருக்கட்டும் அல்லது மெலடியாக இருக்கட்டு ஒவ்வொரு வகைமையிலும் அவரது தனித்துவம் வெளிப்படும். ஹாரிஷ் ஜெயராஜின் இசையில் ஒரு சில பொதுவான அம்சங்கள் இசை ரசிகர்களை கவர்கின்றன. மேலும் படிக்க
 

Source link