ரயில் சேவை ( chennai beach to chengalpattu train )
சென்னையின் உள்புறமும், புறநகரங்களில் இருந்து சென்னைக்குள் வருவதற்கும் மின்சார ரயில்களின் போக்குவரத்து சேவை மிகவும் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகிறது. சென்னையில் புறநகர் ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து சென்னைக்கும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து, மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் சேவை மிக முக்கிய பொது போக்குவரத்துக்காக இருந்து வருகிறது. சாலை மார்க்கமாக செல்லும் பொழுது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பெரும்பாலும் ரயில் சேவையில் பயன்படுத்துகின்றனர். அதேபோன்று மின்சார ரயில் கட்டணம் என்பது மிக குறைவு என்பதாலும் பெரும்பாலான மக்கள் ரயில் சேவையை விரும்புகின்றனர்.
44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. நாளை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படாது.
பராமரிப்பு பணிகள்
கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில் சேவை இன்று முதல் 6 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரயில்கள் ரத்து
இதேபோல் இன்று முதல் 22-ந்தேதி இரவு 10.45 மணி முதல் காலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே
கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 8.15, 8.20, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.15 மணிக்கு பின், புறப்படும் புறநகர் ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண