ஐஷூ – நிக்சன்
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஒரு ஜோடி என்றால் அது ஐஷூ – நிக்சன் ஜோடி. தான் ஒரு ஆர்த்தடக்ஸ் குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருப்பதாகக் கூறிய ஐஷூ, நிக்சன் உடன் பிக்பாஸ் வீட்டில் கொண்டு சென்ற காதல் டிராக் பெரும் விமர்சனங்களைப் பெற்றது.
40 நாள்களுக்கு மேல் இருந்தும் காதல் டிராக் தவிர்த்து பிக்பாஸ் வீட்டில் எதுவும் செய்யாதது பிக்பாஸ் ரசிகர்களையும் அவரது பெற்றோரையும் பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ஐஷூ எவிக்டான அடுத்த வாரமே நிக்சனும் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவற்றுக்கு மாறாக கொஞ்சம் கொஞ்சமாக தனித்து வெளியே தெரியத் தொடங்கி, விளையாட்டில் நிக்சன் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
ஐஷூவின் பெற்றோர் நிக்சன் தான் தங்கள் மகளின் பிக்பாஸ் கேமை ஸ்பாயில் செய்ததாக கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வந்தன. ஒரு படி மேலே போய், ஐஷூவை வெளியேற்றும்படி அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே சென்று ஐஷூவின் பெற்றோர் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர், 80 நாட்களுக்கு பிறகு நிக்சன் எவிக்ட் ஆனார்.
கிராண்ட் ஃபினாலேவில் பங்கேற்காத ஐஷூ
இந்த நிலையில், இன்று கிராண்ட் ஃபினாலே நடைபெற்று வருகிறது. இந்த கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் பங்கேற்ற நிலையில், ஐஷூ மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதனால், ரசிகர்கள் பலரும் ஐஷூ கலந்து கொள்ளாதது பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக, இந்த வாரம் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அந்த நேரத்திலும் ஐஷூ வரவில்லை. ஐஷூ பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போதே அவரது பெற்றோர்கள் வெளியேற்றுப்படி பல முறை கூறியுள்ளதாக தெரிகிறது. எனவே, ஐஷூ எந்த காரணத்திற்காக கலந்து கெள்ளவில்லை என்று எந்த தகவலும் வெளியாகவில்லை.
Vareeeyyyyy vaaaa #Aishu 😜🥳😂😂#BiggBossTamil7 pic.twitter.com/MdS2BI1bQg
— 🦋❥࿐ ṗ༐ԅἳƴλƛҥ ࿐ ᥫ᭡ (@Pristhetics_) January 14, 2024
இந்த நிலையில், அர்ச்சனா போன்று ஐஷூ ரீல்ஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அர்ச்சனாவுக்கு, ஐஷூக்கும் நடந்த வாக்குவாதத்தை ரீல்ஸ் ஆக வீடியோ பதிவு செய்து பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் பாசிட்டிவ் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், அர்ச்சனா ஆர்மியில் சேர்ந்துவிட்டாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க
Bigg Boss 7 Tamil Grand Finale LIVE: 2 வாரம் தான் பிளான் பண்ணி வந்தேன்.. பிக்பாஸ் பைனல்ஸ் மேடையில் அர்ச்சனா பளிச்!
Bigg Boss 7 Tamil Title Winner: அடேங்கப்பா.. டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் சம்பளம் தெரியுமா? அள்ளிக்கொடுத்த பிக்பாஸ்!