பிக்பாஸ் சீசன் 7

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? என்று தெரிய உள்ளது. இந்த சீசனில் எப்போதும் இல்லாத அளவுக்கு 18 போட்டியாளர்களுடன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, இரண்டு வீடுகள், மிட் வீக் எவிக்‌ஷன், ரெட் கார்டு எலிமினேஷன் என முற்றிலும் மாறுபட்ட சீசனாக இந்த பிக்பாஸ் இருந்தது.

பிக்பாஸ் சீசன் 7 முடிய உள்ள நிலையில் இறுதிகட்ட போட்டியாளர்களாக மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி, விஜய் வர்மா உள்ளிட்டோர் உள்ளனர். இந்த நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்திருக்கின்றனர். கடந்த சீசன்களில் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் உள்ளே வந்ததும் ஜாலியாக நிகழ்ச்சியை கொண்டு போய்கொண்டு இருப்பார்கள்.

ஆனால், இதற்கு எதிர்மறையாக நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, எலிமினேட் ஆன போட்டியாளர்கள் உள்ளே வந்ததும் மீண்டும் பூகம்பம் வெடிக்க தொடங்கி இருக்கிறது. அவர்கள் வந்த முதல் நாளிளே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

பீக்பாஸ் வீட்டில் சலசலப்பு:

அனன்யா, அக்ஷயா, வினுஷா ஆகியோர் தற்போது வரை வந்திருக்கின்றனர். இவர்கள் வந்த உடனேயே ஆளுக்கொரு சண்டையே பற்ற வைத்துள்ளனர். முதலில் வீட்டிற்குள் வந்த அனன்யா மாயாவிடம் வெளியில் நடப்பதை சொல்லிக் கொண்டிருக்க, விஷ்ணு, மணி இன்னுமா குரூப்பா விளையாடுறாங்க? என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.

இதன்பின், வினுஷா உள்ளே வந்ததும் தினேஷ் அவரை தனியாக அழைத்து நிக்சன் பற்றி கேட்டிருக்கிறார். ”தம்பி போன் பண்ணினானா? பேசினானா?" என கேட்டார் தினேஷ்.

”பேசினான். ஷோவில் பேசிக்கலாம்னு சொல்லிவிட்டேன். ஒரு 70 கேமரா முன்னாடி வச்சு பேசினான்ல. அதே 70 கேமரா முன்னாடி வச்சு பேசுவோம்" என்றார் வினுஷா. அதைத் தொடர்ந்து, அர்ச்சானாவிடமும் சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அர்ச்சனாவை சரமாரி கேள்வி கேட்ட வினுஷா:

அதாவது, "உங்களுக்கு ஒரு பிரச்னை என்று வரும்போது என்னோட பெயரை பயன்படுத்தி நிக்சனை டார்கெட் பண்ணி இருக்கீங்க. இதை நீங்க முன்னாடியே பண்ணலாமே?" என்று கேள்வி எழுப்பினார் வினுஷா. இதற்கு பதிலளித்த அர்ச்சனா, "நேற்று என்னை கோபப்படுத்தினான். அதனால், இன்றைக்கு கோபப்படுத்தனும் என்று நான் சின்ன பிள்ளைதனமாக பண்ண ஒரு விஷயம் அது" என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய வினுஷா, "எனக்கு அது பிடிக்கவில்லை. சாரி சொல்லிடு மக்கள் மறப்பாங்க என்று சொன்னிங்க" என்று கூற. "அவன் (நிக்சன்) பயந்துட்டான். சின்ன பையன்" என்று அர்ச்சனா கூறுகிறார். அதற்கு வினுஷா, "அவன் என்னோட ஒரு வயது தான் சின்ன பையன்” என்று கூற, அதற்கு அர்ச்சனா, "ஓவர் அதலாம்" என்றார். "ஆமா ஓவர் தான் என்று நீங்க சொல்லுறீங்க. நான் தான் அங்க பாதிக்கப்பட்டவரா இருக்கேன்" என்று வினுஷா கூறியிருக்கிறார்.

வினுஷா மற்றும் பூர்ணிமாவை உடல் கேலி செய்திருந்தார் நிக்சன். பெண்ணின் உடம்பை பற்றி விமர்சித்த நிக்சனுக்கு ஒர ரெட் கார்டு கிடையாதா? என பார்வையாளர்கள் பல கேள்விகளை அடுக்கிய நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு அவர் எலிமினேட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.