<p>ஆம் ஆத்மி கட்யின் தலைவரும் டெல்லி முதலமைச்சராகவும் உள்ளவர் அரவிந்த் கெஜ்ரிவால். மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவது இது ஆறாவது முறையாகும்.</p>
<p>கெஜ்ரிவால் தலைநகர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகிய இருவர் சிறையில் உள்ளனர். ஆனால் ஏற்கனவே 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகவில்லை. </p>
<p>பிப்ரவரி 7 அன்று, கலால் கொள்கை தொடர்பான வழக்கில் சம்மனைத் தவிர்த்ததற்காக அமலாக்கத்துறை தாக்கல் செய்த புகாரின் பேரில் பிப்ரவரி 17 ஆம் தேதி கெஜ்ரிவாலை நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது. </p>
<p> </p>