all-party demonstration was held at Chengalpattu demanding the closure of the Paranur toll plaza – TNN | “காலாவதியான பரனூர் சுங்கச்சாவடி இழுத்து மூடுங்க”


பரனூர் சுங்கச்சாவடியை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக நடைபெறும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, மத்திய அரசு தான் பொறுப்பு இந்த கருத்தில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன –  முத்தரசன்
செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி
செங்கல்பட்டு அடுத்த பரனூர் பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு காலாவதியான பரநூல் சொந்த சாவடியை இழுத்து மூடக்கோரி இடதுசாரி கட்சிகள், மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள், லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, வணிகர் சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கண்டன ஆர்ப்பாட்டம்
நகராட்சி எல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் வரம்பிற்குள் சுங்கச்சாவடி அமைக்க கூடாது. 60 km க்கு இடையே ஒன்றுக்கு மேற்பட்ட சுங்கச்சாவடி இருக்கக் கூடாது மற்றும் திட்டமடி தொகை வசூல் ஆகிய முடிந்த பிறகு பரமாரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற விதிகள் பரனூர் சுங்கச்சாவடியில் பின்பற்றவில்லை. மூன்று ஆண்டுகளில் விதிகளை மீறி போய் 28 கோடி ரூபாய் வசூலித்ததாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1956 க்கு முன்பாக கட்டப்பட்ட மேம்பாலத்தை திட்ட மதிப்பீட்டில், சேர்க்கக்கூடாது என்ற விதியை அப்பட்டமாக மீறி செயல்பட்டு வருகிறது. இதுபோன்று பல்வேறு வகைகளின் முறைகேடாக செயல்பட்டு வரும் பரனூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன், மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சுங்கச்சாவடிக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினர். 

இந்தப் போராட்டத்தில், திமுக, விசிக, மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுங்கச்சாவடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் காலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று வரை பரனூர் சுங்கச்சாவடி அகற்றப்படவில்லை. அதனால் தற்போது மீண்டும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம், தமிழக அரசு இந்த சுங்கச்சாவடி அகற்ற மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியான சுங்கச்சாவடியை வைத்து பகல் கொள்ளை அடித்து வருவதை அனுமதிக்க முடியாது.
சுங்கச்சாவடியை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக நடைபெறும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, மத்திய அரசு தான் பொறுப்பு இந்த கருத்தில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன என தெரிவித்தார்.

மேலும் காண

Source link