ABP C Voter Opinion Poll 2024 Lok Sabha Election Rajasthan nda and Punjab india alliance | ABP C Voter Opinion Poll: ராஜஸ்தானில் மலரும் தாமரை; பஞ்சாப்பில் ஓங்கும் கை


ABP-C Voter Opinion Poll: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் தொடர்பாக ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. 
ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் எந்த கட்சி பலம் வாய்ந்து உள்ளது என ABP – சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் மூலம் தெரிந்து கொள்வோம்.
மக்களவை தேர்தல்:
இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
பஞ்சாப் மாநிலத்துக்கு வரும் ஜூன் 1 ஆம் தேதி, கடைசி கட்டமான 7வது கட்டத்தில் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்துக்கு ஏப்ரல் மாதத்தில் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஏற்கனவே, ABP செய்தி குழுமம் மற்றும் சி வோட்டர் இணைந்து, 3 முறை தேர்தல் முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது 4வது முறையாக கருத்து கணிப்புகளை நடத்தி வெளியிட்டுள்ளன.
இந்த தேர்தல் கணிப்பு முடிவுகளானது, மாநில வாரியாக கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
Also Read: ABP C Voter Opinion Poll: தமிழ்நாடு- கேரளாவில் யாருக்கு வெற்றி வாய்ப்பு – ABP- சி வோட்டர் கணிப்பு முடிவுகள் வெளியானது
பஞ்சாப்பில் ஓங்கும் கை:
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணி 30.4 சதவிகித வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாக கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியானது 27 சதவிகித வாக்குகளையும், பாஜக தலைமையிலான NDA கூட்டணி 20.6 சதவிகித வாக்குகளையும், சிரோமணி அகாலி தளம் 16.5 சதவிகித வாக்குகளையும், இதர கட்சிகள் 5.5 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் I.N.D.I.A கூட்டணியில் உள்ளதால், பஞ்சாப் மாநிலத்தில் I.N.D.I.A  கூட்டணி பலமாக உள்ளது என்றே கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது என பார்க்கும்போது, பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணி 7 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும் என I.N.D.I.A  கூட்டணி 11 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் பாஜக கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தானில் மலரும் தாமரை:
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜக 55 சதவிகித வாக்குகளையும், I.N.D.I.A கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 39.1 சதவிகித வாக்குகளையும், இதர கட்சிகள் 5.9 சதவிகித வாக்குகளையும் பெறும் என வாக்காளர்கள் கணித்துள்ளனர். 
ராஜஸ்தான் மாநிலத்தில் 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. 25 தொகுதிகளையும் பாஜக கட்சியானது கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
கருத்து கணிப்பு முறை:
சி வோட்டர் நடத்திய இந்தக் கருத்து கணிப்பானது, மார்ச் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்டவையாகும். கருத்துக்கணிப்பானது வாக்களிக்க தகுதி உள்ளவர்களிடம்  நடத்தப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம். 
கருத்து கணிப்பில் பிழை மார்ஜின் அளவானது + – 3% முதல் + – 5% இருக்கலாம் எனவும் 95% நம்பிக்கைத்தன்மை கொண்டதாக இருக்கும் என சி வோட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
Also Read: ABP C Voter Opinion Poll: கர்நாடகத்தில் அதிரடி திருப்பமா? மேற்கு வங்கத்தில் நடக்கப்போவது என்ன? ABP-சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்

Source link