Tamil Nadu latest headlines news till afternoon 24th march 2024 flash news details here



Lok Sabha Elections: பிரதமர் மோடியை எதிர்க்கும் அஜய் ராய், ராகுலை எதிர்க்கும் சுரேந்திரன் – யார் இந்த வேட்பாளர்கள்?

வாரணாசி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் நரேந்திர மோடியை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் களமிறக்கப்பட்டுள்ளார். 54 வயதான இவர் பூர்வாஞ்சல் (கிழக்கு உத்தரப்பிரதேசம்) பிராந்தியத்தில் ‘பாகுபலி’  என்று அறியப்படுகிறார். கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் அஜய் ராய் தான், காங்கிரஸ் சார்பில் மோடியை எதிர்த்து போட்டியிட்டார். மேலும் படிக்க

Loksabha Election 2024: ”விஜய பிரபாகர் எனக்கு மகன் மாதிரி“ : ராதிகா சரத்குமார் பேட்டி..

அடுத்த 5 ஆண்டு காலம் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்ய மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், அதிமுக கட்சி தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. மேலும் படிக்க

Lok Sabha Election 2024: மோடிக்கு தமிழ்நாடு மீது பாசம் கிடையாது வெறும் வேஷம் – அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் எம்.பி போட்டியிடும் நிலையில், வானூர் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் வானூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளை சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் படிக்க

TN Weather Update: வெயிலின் கொடுமை.. அசௌகரியம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.. வானிலை தகவல் இதோ..

இன்று முதல் 27 ஆம் தேதி வரை தமிழகத்தில்   ஓரிரு   இடங்களில்    அதிகபட்ச    வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில்  2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

Lok Sabha Election 2024: இந்தியாவில் இந்திரா காந்திக்கு பிறகு 3வது முறையாக மோடி பிரதமராக வருவார் – ராமதாஸ்

என் தாய் கிராமத்தில் இருந்து தேர்தல் பரப்புரையை துவங்குகிறேன். பத்து தொகுதிகளை பெற்ற கட்சி, ஒரு கிராமத்தில் இருந்து பரப்புரை தொடங்குவதை எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். என் முதல் பரப்புரையை எளிய முறையில் தொடங்குகிறேன். இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். இந்திரா காந்தி மூன்று பிரதமராக இருந்தார், மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக உள்ளார். மேலும் படிக்க

மேலும் காண

Source link