மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 சீசன் 17 வருகின்ற மார்ச் 22ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த லீக் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் பல அனுபவ வீரர்களின் ஆதிக்கத்தை இளம் வீரர்கள் எத்தனையோ பேர் தவிடு பொடியாக்கியுள்ளனர்.
இதன்மூலம், இந்திய அணிக்கு தகுதி பெற்றவர்கள் ஏராளம். கடந்த சீசனில் கூட கொல்கத்தா அணிக்காக விளையாடிய ரிங்கு சிங், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து புகழ்பெற்று இந்திய அணிக்கும் தேர்வானார். இந்தநிலையில், ஐபிஎல் 2024ல் விளையாடும் மிகவும் வயதான மற்றும் இளமையான வீரர் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிகவும் வயதான வீரர்:
ஐபிஎல் போட்டிகளில் மிக நீண்ட காலமாக விளையாடி வரும் வீரர்கள் பலர் உள்ளனர். இதில், மிக முக்கியமான வீரர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சிஎஸ்கே அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனிதான். இவருக்கு தற்போது 42 வயது ஆகிறது.
எம்.எஸ்.தோனி ஐபிஎல் முதல் சீசனில் இருந்து இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது தலைமையின் கீழ் சென்னை அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐபிஎல்லில் இதுவ்ரை தோனி 250 போட்டிகளில் விளையாடி 38.79 சராசரியில் 24 அரைசதம் உட்பட 5, 082 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஐபிஎல் லீக் வரலாற்றில் தோனி மிகவும் வெற்றிகரமான விக்கெட் கீப்பர் ஆவார். இதுவரை 180 முறை பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ளார்.
மிகவும் இளம் வயது வீரர்:
ஐபிஎல்2024ல் மிகவும் இளைய வீரர் ஆங்கிரிஷ் ரகுவன்ஷி ஆவார். இவர் கடந்த 2005ம் ஆண்டு ஜூன் 5ல் பிறந்தவர். 2024 ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது ஆங்கிரிஷ் பிரபலமானார். 2022 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர். அந்த நேரத்தில், ஆங்கிரிஷ் 6 போட்டிகளில் 46.33 சராசரியில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் உட்பட 278 ரன்கள் எடுத்தார்.
ஒவ்வொரு அணியில் அதிக வயது இளம் வயது வீரர்கள் பட்டியல் இதோ:
இளம் வயது வீரர்..
அணி
இளைய வீரர்
வயது
குஜராத் டைட்டன்ஸ்
நூர் அகமது
18
லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ்
அர்ஷின் குல்கர்னி
19
ராஜஸ்தான் ராயல்ஸ்
குணால் சிங் ரத்தோர்
21
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
நிதிஷ் குமார் ரெட்டி
20
சென்னை சூப்பர் கிங்ஸ்
அவனிஷ் ஆரவெல்லி ராவ்
18
டெல்லி கேப்பிடல்ஸ்
ஸ்வஸ்திக் சிகாரா
18
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
சவுரவ் சவுகான்
23
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அங்கிரிஷ் ரகுவன்ஷி
18
மும்பை இந்தியன்ஸ்
டெவால்ட் ப்ரீவிஸ்
20
பஞ்சாப் கிங்ஸ்
பிரப்சிம்ரன் சிங்
23
அதிக வயது வீரர்..
அணி
வயதான வீரர்
வயது
குஜராத் டைட்டன்ஸ்
விருத்திமான் சாஹா
39
லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ்
அமித் மிஸ்ரா
41
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஆர் அஸ்வின்
37
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
புவனேஷ்வர் குமார்
34
சென்னை சூப்பர் கிங்ஸ்
எம்எஸ் தோனி
42
டெல்லி கேப்பிடல்ஸ்
டேவிட் வார்னர்
37
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஃபாஃப் டு பிளெசிஸ்
39
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஆண்ட்ரே ரஸ்ஸல்
35
மும்பை இந்தியன்ஸ்
முகமது நபி
39
பஞ்சாப் கிங்ஸ்
ஷிகர் தவான்
38
மேலும் காண