Usa California snow fall season starts wind over northern region

அமெரிக்காவில்  மாகாணத்தில் கடுமையான பனி பொழிந்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அங்கு பனிப்பொழிவானது, அதிவேக காற்றுடன் சேர்ந்து பொழிந்து வருகிறது. இதனால், சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனியானது காணப்படுகிறது. 
பனிப்பொழிவுடன் காற்றும் சுமார் 60 கி.மீ வேகம் வரை வீசி வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால், வீடுகளை விட்டு வெளியே வருவதை மக்கள் பெரும்பாலும் தவிர்த்து, வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மேலும் பல  இடங்களில், வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் வாகனங்கள் நின்று கொண்டிருப்பதால் போக்குவரத்தும் சிக்கலாகி உள்ளது.
இந்நிலையில், பனிப்பொழியும் வீடியோவை பலரும் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றன. 


California #snow https://t.co/HSnFShRG7A
— NatureOnWatch 🧭 (@natureonwatch) March 1, 2024

அடுத்த சில தினங்களுக்கும், இதே நிலை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Soda Springs, California, has already received 19.1″ of snow in the past 24 hours, and more is still to come! 🌨️ pic.twitter.com/UJhhLEaboI
— AccuWeather (@accuweather) March 1, 2024

மேலும் காண

Source link