விழுப்புரம்: மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 6 ஆயிரம் கோடி பாஜகவிற்கு நிதி வழங்கி உள்ளவர்கள் யாரென்று தெரிவிக்க வேண்டுமெனவும், 570 கோடி தேர்தல் ஆணையம் பிடித்த பணம் சிபிஐக்கு உத்தரவிட்டு 8 ஆண்டுகள் ஆகியும் அது யாருடைய பணமென்று தெரிவிக்கவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் திமுக சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் பாராளுமனற பரப்புரை கூட்டம் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, லட்சுமணன். எம் பி கெளதம சிகாமணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி….
பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு தமிழ் மக்களுக்கு மோடி துரோகம் இழைத்துள்ளதாகவும் பத்தாண்டு கால ஆட்சியில் தமிழகத்திற்கு மோடி செய்தது என்ன ? வளர்ச்சி என்ன இருக்கிறது என்று பேசுவதற்கு பாஜகவில் யாருக்கும் தைரியம் இல்லை என்றும் தெரு தெருவாக பொய் பேசுவத்றகாகவே பாஜகவில் அண்ணாமலை உள்ளதாகவும், மோடி நம்பி இருப்பதெல்லாம் ஊடகங்களை விலைக்கு வாங்கி பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அம்பானியின் வளர்ச்சிக்காக மட்டுமே மோடி செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
உத்தரம புத்திரன் மோடி காலையில், மாலையில் என்று ஒரு வேஷம் போடுவார் ஒவ்வொரு மாநிலத்திற்கு சென்றால் அதற்கு ஏற்றவாரு ஆடை அணிந்து மோடி ஏமாற்றுவதாகவும், மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 6 ஆயிரம் கோடி பாஜகவிற்கு நிதி வழங்கி உள்ளார்கள் அது யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை என்றும் காங்கிரசு கட்சியின் பணத்தை முடக்கி சர்வாதிகார ஆட்சியை டெல்லியில் மோடி செய்து வருவதாகவும் 2016ல் 570 கோடி பணம் பிடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்ட பணம் யாருடையது என்று விசாரனை செய்ய சிபி ஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு 8 வருடங்கள் ஆகிறது ஆனால் இதுவரை யாருடையது என வெளியிடவில்லை என தெரிவித்தார்.
திமுக காரர்கள் வீட்டிற்கும் எதிர்கட்சி காரர்கள் வீட்டிற்கு அமலாக்க துறையை அனுப்பும் மோடி அரசு பணம் பிடிப்பட்டது குறித்து ஏன் யாருடையது என தெரிவிக்கவில்லை இந்த பணம் பாஜகவின் மோடிக்கு சொந்தமானதாக இருக்கும் என சந்தேகம் இருப்பதாகவும் கருப்பு பணம் மீட்கப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்படுமென மோடி அறிவித்து அதனை செயல்படுத்தவில்லை ஆனால் தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போன்று குடும்ப பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் செலுத்தி வருவதாக கூறினார். துரதிஷ்டவசமாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த எடப்பாடி பழனிச்சாமி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடல் மெரினாவில் அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் தான் அதிமுக கட்சி சின்னாபின்னமாகி கொண்டிருப்பதாகவும்,மெரினாவில் கலைஞர் உடல் அடக்கம் செய்ய நீதிபதியாக இருந்த பெண் அனுமதி வழங்கியபோது நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன் அதற்கு தனக்கு தெரிவிக்க வேண்டாம் இந்த நாற்காலியில் அமர கருணாநிதி தான் காரணம் ஆகையால் தனக்கு நன்றி தெரிவிக்க வேண்டாமென்று நீதிபதி தெரிவித்ததாகவும் கடந்த பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் 411 எம் எல் ஏக்களை மோடி விலைக்கு வாங்கி ஆட்சி புரியும் அரசாக மோடி அரசு உள்ளதாக ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
மேலும் காண