7 am headlines today 2024 14th February headlines news tamilnadu india world

தமிழ்நாடு:

அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சிவில் கோர்ட்டில் நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண்; குழந்தை பெற்ற மறுநாளில் தேர்வு எழுதி ஸ்ரீபதி சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கோயம்பேடு பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது – ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய முனைய விவகாரம்; அமைச்சர் சேகர்பாபு – எடப்பாடி பழனிசாமி கடும் மோதல் 
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை பிரச்சனை; எடப்பாடி அருகே ஆர்.பி.உதயகுமாருக்கு இடம் – முதலமைச்சர் கூறியதை ஏற்று சபாநாயகர் அறிவிப்பு
அரசால் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில் மருத்துவ விடுப்பில் சென்றார் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர்; விதிகளை மீறி துணைவேந்தர் அனுமதி வழங்கியதாக பேராசிரியர்கள் குற்றச்சாட்டு
உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரலாக எதிரொலிப்போம்; மொத்த இந்தியாவுக்கும் விடியல் கிடைக்கும் நாள் தூரத்தில் இல்லை – திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பெரிய பிரச்சினைகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது. அதை சரிசெய்து தான் திறந்து வைத்திருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. 
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றம்.

இந்தியா: 

வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் ‘பிரதமர் சூர்யா கர்’ எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த புதிய சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
விவசாயிகளின் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
விவசாயிகளின் பேரணி தொடங்கியுள்ளதை அடுத்து, இருசக்கர வாகனங்களில் டெல்லி நோக்கி வந்த போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
லட்சக்கணக்கில் விவசாயிகள் ஒன்றிணைந்து டெல்லியில் முற்றுகை; டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு – 3 மாநில எல்லைகளில் ஆயிரக்கணக்கானோர் கைது

உலகம்: 

துருக்கி தங்கச்சுரங்கத்தில் நிலச்சரிவு: 9 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்தனர்.
ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் கைது – இஸ்ரேல் தகவல்.
அபுதாபியில் முதல் இந்து கோயிலை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.
அபுதாபியில் யு.பி.ஐ பயன்பாட்டை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி.
பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சியை தவிர பிற கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஏமனில் கண்ணிவெடியில் சிக்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு, 4 பேர் காயம்

விளையாட்டு:

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீதான இடைநீக்கம் ரத்து. 
ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கரால் நிரப்ப முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
ICC Player Of The Month என்ற விருதை வென்ற முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் இளம் வீரர் ஷமர் ஜோசப்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தத்தாஜிராவ் கெய்க்வாட் நேற்று காலை  பரோடாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். 
ப்ரோ கபடி லீக்: தபாங் டெல்லி அணியை இன்று எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ் அணி

Published at : 14 Feb 2024 07:04 AM (IST)

மேலும் காண

Source link