7 am headlines today 2024 12th February headlines news tamilnadu india world

தமிழ்நாடு:

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது; 19ம் தேதி பட்ஜெட் தாக்கல்
ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை மக்கள் வசதிப்படி சென்று பதிவு செய்துகொள்ளலாம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய பஸ்கள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி – அமைச்சர் சிவசங்கர் தகவல்
நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது; மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு மாடல் அரசு – அமைச்சர் உதயநிதி பேச்சு
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழப்பு – காவல்துறையினர் விசாரணை
திமுக, விசிக தொகுதி பங்கீடு – அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 3 மணிக்கு ஆலோசனை
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு ; மேலும் 4 பேர் கைது
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் இந்தியாவை வழிநடத்துகிறது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
12ஆம் வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று (பிப்.12) முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்குகிறது.

இந்தியா: 

பிரதமர் மோடிக்கு நெருக்கமான மாநிலம் தமிழ்நாடு – சென்னையில் ஜே.பி. நட்டா பேச்சு
கோவை அரபிக் கல்லூரியில் அரபு மொழி சொல்லி தருவதாகக் கூறி இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்க்கும் முயற்சி நடந்ததுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டணை வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக யுபிஐ தொழில்நுட்ப சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். 
பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 3,137 தமிழக மீனவர்கள் கைது – மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் டி.என்.ஏவில் இருக்கிறது அன்பு – ராகுல் காந்தி பேச்சு
டெல்லியில் விவசாயிகள் நாளை முற்றுகை; ஹரியானா எல்லைக்கு சீல் வைப்பு – 5,000 காவல்துறையினர் குவிப்பு
பொது நலன் மற்றும் நிர்வாகத்தில் அயோத்தி ராமர் கோயில் புது சகாப்தத்தை கொண்டு வந்துள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலகம்:

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவுவதை நேரில் பார்க்க முன்பதிவு தொடக்கம் – இஸ்ரோ அறிவிப்பு.
சோமாலியா: கூட்டுப்போர் பயிற்சியின்போது பயங்கரவாதிகள் தாக்குதல் – 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.
பொதுமக்கள் ஆதரவுக்கு நன்றி – புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அறிக்கை.
காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – பாலஸ்தீனர்கள் 31 பேர் உயிரிழப்பு. 
பாலியல் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதால் ஹங்கேரி அதிபர் கத்தலின் நோவாக் பதவி விலகியுள்ளார். 

விளையாட்டு: 

சென்னை ஓபன் டென்னிஸில் இந்திய வீரர் சுமித் நாகல் சாம்பியன்.
ப்ரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்டன்ஸ் அணி அபார வெற்றி.
19 வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி.  
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சதம்; ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்து மேக்ஸ்வெல்
ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் வீரர்களை பிசிசிஐ தேர்வுக்குழு மதிப்பதில்லை என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

 

Published at : 12 Feb 2024 07:24 AM (IST)

மேலும் காண

Source link