Tamil Nadu latest headlines news till afternoon 10th February 2024 flash news details here | TN Headlines: மெட்ரோவுக்காக முதலமைச்சர் கடிதம்! ஜெயலலிதா வழங்கிய யானைக்கு துன்புறுத்தல்


CM Stalin letter to PM: மெட்ரோ 2ஆம் கட்ட பணிக்கு ஒப்புதல் தருக – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!
மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் மேலும் படிக்க
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு வழக்கில் இறுதி தீர்ப்பு தேதி அறிவிப்பு
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்த, விசாரணை முடிந்த நிலையில் இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு 12 ஆம் தேதி வழங்கப்படுமென விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க
Mettur dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து 25 கன அடியில் இருந்து 58 கன அடியாக உயர்வு
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 83 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 25 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் படிக்க
NIA Raid: மீண்டும் தமிழ்நாட்டில் களமிறங்கிய என்.ஐ.ஏ., 20 க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை..!
சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20க்கு மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கார் வெடிப்பு வழக்கு தொடர்பால இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க
தொடரும் கிளாம்பாக்கம் பஞ்சாயத்து.. சாலைக்கு வந்த பயணிகள்.. நடப்பது என்ன ?
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திடீரென சென்னை திரிசை தேசிய நெடுஞ்சாலை அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் படிக்க
Guruvayur Temple: ஜெயலலிதா வழங்கிய யானைகளை துன்புறுத்திய பாகன்கள் .. கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்
குருவாயூர் கோயிலில் இருக்கு கிருஷ்ணா மற்றும் சிவன் யானையை பாகன்கள் துன்புறுத்திய சம்பவத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னுமிடத்தில் கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்திய அளவில் முக்கிய வழிபாட்டுத் தலமாக திகழும் குருவாயூர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம் மேலும் படிக்க

மேலும் காண

Source link