லால் சலாம் திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
மொய்தீன் பாய் கதாபாத்திரம்
விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா, கபில் தேவ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் செய்யப்படும் மத அரசியல், 90-களை அடிப்படையாகக் கொண்ட கதை என முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் நேற்று காலை வெளிநாடுகள், அண்டை மாநிலங்களில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கி வருகின்றனர். மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில், படத்தில் ரஜினி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சிறப்பாக ரஜினி பாத்திரத்துக்கு பொருந்தியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் உணர்ச்சிகரம்
இதனிடையே, தன்னை முதன்முறையாக இயக்கியுள்ள தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் உணர்ச்சிகரமான ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். “என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அத்துடன் தன்னை ஐஸ்வர்யா வீல் சேரில் அமர்த்தி தள்ளிச் செல்லும் புகைப்படம் ஒன்றிணையும் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமிதரிசனம்
தமிழ்நாட்டில் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் முதல் காட்சி நேற்று காலை 9 மணிக்குத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று முதலே ரஜினிகாந்த் ரசிகர்களால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டது. படத்தை வரவேற்கும் விதமாகவும், படம் வெற்றி அடையவும் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் சாமிதரிசனம் செய்தனர். லால் சலாம் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் லால் சலாம் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். பிறகு திருவண்ணாமலையில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்ட லால் சலாம் படத்தினை பார்த்தார்.
மேலும் படிக்க: Lal Salaam: “மொய்தீன் பாய்” மட்டுமா..? ரஜினி இதுவரை நடித்துள்ள இஸ்லாமிய கேரக்டர்கள் என்னென்ன தெரியுமா?
Lal Salaam Release LIVE : மொய்தீன் பாய் தரிசனம்.. முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடும் ரசிகர்கள்.. அப்டேட்ஸ் உடனுக்குடன்!
மேலும் காண