மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான மம்தா அறிவித்த நிலையில், தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
INDIA கூட்டணியில் இடம்பெற்ற போதிலும், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையில் காரணமாக தனித்து போட்டியிடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.