ரஷ்யாவில் உள்ள படைகளை வட கொரியா திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் தென்கொரியா வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு மீது போர் நடத்தி வரும் ரஷ்யா, தற்போது வடகொரிய ராணுவ வீரர்களை போரில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக, வடகொரிய படைகளுக்கு ரஷயா பயிற்சி அளிக்கும் வீடியோ வெளியாகியிருந்தது.
இதன்மூலம், உக்ரைனில் ரஷ்ய படையுடன் இணைந்து வடகொரிய படைகளும் போரில் ஈடுபடும் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அதிலும், 10,000 வீரர்களை போரில் ஈடுபடுத்தியுள்ளதாக கூறி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து, வடகொரியாவுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. உக்ரைனில் போரில் ஈடுபடுத்தப்படும் தங்களது வீரர்களை வடகொரியா திரும்பப் பெற வேண்டும் என்று தென்கொரியா மற்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வடகொரிய வீரர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டால், அது மிகப்பெரிய பாதிப்பையே உக்ரைனில் ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. மேலும், இப்போது ரஷ்யாவுக்காக வடகொரிய வீரர்கள் போரில் ஈடுபட்டால், எதிர்காலத்தில் தென்கொரியாவுக்கு எதிராக வடகொரியா போர் நடத்தினால், அப்போது ரஷ்யா உதவி செய்யும் என்றும் அமெரிக்கா மற்றும் தென்கொரியா அஞ்சுகிறது.
இதன் காரணமாகவே அமெரிக்காவும், தென்கொரியாவும், தென்கொரிய படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், வடகொரியாவோ, யாருடைய பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாகவே செயல்படும் நாடு என்பதால், இவர்களது கோரிக்கையை ஏற்காமல், போரில் தங்களது வீர்களை ஈடுபடுத்தும் என்றே தெரிகிறது.