Global Military ExpendtureIndia is 4th largest military spender after US, China & russia | Global Military Expendture: போர் பதற்றம்


Global Military Expendture: கடந்த 2023ம் ஆண்டில் ராணுவத்திற்காக உலக நாடுகள் சேர்ந்து மொத்தமாக 2,443 பில்லியன்  அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளன.
உலகளவியா ராணுவ செலவினம்:
உக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – காஸா என இரண்டு போர்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இஸ்ரேல் – ஈரான் இடையேயும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், சர்வதேச நாடுகள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ராணுவத்திற்காக அதிகளவில் செலவு செய்து வருகின்றன. இந்நிலையில்,  உலகளாவிய ராணுவச் செலவினம் அமைப்பு,  கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டில், ராணுவத்திற்கான செலவினம் 2023 ஆம் ஆண்டில் பெருமளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, கடந்த ஆண்டு உலக நாடுகள் ராணுவத்திற்காக 2,443 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளன. இதில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக, ராணுவத்திற்காக அதிகம் செலவு செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடதில் உள்ளது.
ராணுவ செலவில் டாப் 10 நாடுகள் பட்டியல்:
1. அமெரிக்கா – 916 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
2. சீனா – 296 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
3. ரஷ்யா –  109 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
4. இந்தியா – 84 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
5. சவுதி அரேபியா – 76 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
6. இங்கிலாந்து – 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
7. ஜெர்மனி – 67 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
8.  உக்ரைன் – 65 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
9. பிரான்ஸ் – 61 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
10. ஜப்பான் – 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
இந்த பட்டியலில் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவுடன் பாகிஸ்தான் 30-வது இடத்தில் உள்ளது.
 
இந்தியாவின் ராணுவ செலவினம்:
நாட்டின் ராணுவ நவீனமயமாக்கல், அதன் 14 லட்சம் வீரர்களின் பெரும் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கட்டணங்கள், பலவீனமான பாதுகாப்பு-தொழில்துறை தளம் மற்றும் முறையான இடை-சேவையுடன் ராணுவத் திறன்களை முறையாகக் கட்டியெழுப்புவதற்கான உறுதியான நீண்டகாலத் திட்டங்கள் ஒப்பீட்டளவில் இல்லாதது ஆகியவற்றால் தொடர்ந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் முதல் நவீன காலாட்படை ஆயுதங்கள், டேங்க் எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள் மற்றும் இரவு நேரச் சண்டை திறன்கள் வரையிலான பல பகுதிகளில் இந்திய ஆயுதப் படையில் பெரும் செயல்பாட்டு பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆய்வறிக்கையின்படி, இந்தியா கடந்த ஆண்டு 89 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 7 லட்சம் கோடி ரூபாயை பாதுகாப்பிற்காக செலவு செய்துள்ளது.
வலுவாகும் சீனா:
இந்தியாவின் செயல்பாட்டிற்கு நேர் எதிராக, சீனா தனது 20 லட்சம் பேர் அடங்கிய ராணுவத்தை நிலம், காற்று மற்றும் கடல் மற்றும் அணுசக்தி, விண்வெளி மற்றும் சைபர் போன்ற பாரம்பரிய களங்களில் விரைவாக நவீனமயமாக்குகிறது. அந்நாட்டின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பின்படி,  சீன ராணுவம் தொடர்ச்சியாக 29 வது ஆண்டாக உயர்த்தப்பட்ட பட்ஜெட்டை பெற்றுள்ளது.   இது இந்தியாவை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம். தைவான், தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல்களில் அமெரிக்கா தலைமையிலான தலையீட்டைத் தடுப்பதற்கு சீனாவின் ராணுவச் செலவுகள் பெரிதும் உதவுகின்றன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடற்படையின் இருப்பை படிப்படியாக அதிகரிக்கிறது.
அதிகரிக்கும் அசாதாரண சூழல்:
அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா-ஓசியானியா ஆகிய ஐந்து புவியியல் பகுதிகளிலும் ராணுவச் செலவு அதிகரித்தது 2009க்குப் பிறகு இதுவே முதல் முறை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ செலவினங்களில் முன்பு எப்போதும் இல்லாத அளவிலான உயர்வானது,  அமைதி மற்றும் பாதுகாப்பில் உலகளாவிய சரிவுக்கான நேரடியான பிரதிபலிப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண

Source link