விடாமுயற்சி

நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானின் நடைபெற்று வருகிறது. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் இருந்து படப்பிடிப்பு காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா.

இந்த வீடியோவில் அஜித்குமார் ஓட்டிச் செல்லும் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக நினைத்தார்கள். ஆனால் இது படத்தின் ஒரு காட்சி என்றும் அஜித் இந்த ஸ்டண்டை டூப் இல்லாமல் நிஜமாக செய்திருக்கிறார் என்பதை காட்டும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Vidaamuyarchi filming
November 2023.#VidaaMuyarchi pic.twitter.com/M210ikLI5e

— Suresh Chandra (@SureshChandraa) April 4, 2024

ஏற்கனவே வலிமை படத்தின் போது நடிகர் அஜித் பைக்கில் இருந்து விழுந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித்குமாரை பொறுத்தவரை அவருக்கு இது எல்லாம் சகஜம் என்றுதான் சொல்வார்.