7 Am Headlines today 2024 March 27th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு.
திமுக கூட்டணுக்கு வாக்களித்தால் பாஜக எனும் பேரிடரிலிருந்து விடுதலை பெறுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டிலேயே மோடி தங்கினாலும் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்ல முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல்.
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் 4 எம்.எல்.ஏக்கள் இருப்பது அதிமுக போட்ட பிச்சை – சி.வி.சண்முகம் விமர்சனம்.
காலை சிற்றுண்டி திட்டம் நாடு முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புகழை பெற்றுத்தரம் – ப.சிதம்பரம்.
பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்தான்; வேறு சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு இந்திய கிறிஸ்துவ முன்னேற்றக் கழகம் ஆதரவு.  
தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்.
புனித வெள்ளி, வார விடுமுறையை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை.
நகைச்சுவை நடிகர் லட்சுமி நாராயணன் சேஷூ உடல்நலக் குறைவால் காலமானார்.

இந்தியா: 

முதல்கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 102 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு.
வேலை வாய்ப்பு விவகாரத்தில் மக்களவை பாஜக அரசு தவறாக வழிநடத்துகிறது – காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.
கர்நாடகத்துக்கு நிர்மலா சீதாராமன் துரோகம் செய்துவிட்டார் – முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு.
ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாபிலும் பாஜக கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தொண்டர்கள் கைது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல்.
பஞ்சாப் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு.
காஷ்மீரில் இருந்து பாதுகாப்பு படைகளை திரும்ப பெற திட்டம் – உள்துறை அமைச்சர் அமித்ஷா.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மாண்டியாவில் போட்டியிடுவார் என அறிவிப்பு. 

உலகம்: 

ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் பாலத்தில் மோதிய கப்பலில் 22 இந்திய மாலுமிகள் இருந்ததாக தகவல்.
வரலாற்றில் முதல்முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்கிறது சவுதி அரேபியா.
ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முடிவு – பிரிட்டன் நிறுத்தி வைப்பு.
வடமேற்கு ஆப்ரிக்க நாடான செனகல் நாட்டில் அதிபர் தேர்தலில் பாஸிரோ டியாமேஃபேய் வெற்றி.
பாகிஸ்தான்: கைபர் பக்துன்கவா பகுதியில் தற்கொலைப் படை தாக்குதலில் சீன பொறியாளர்கள் 5 பேர் கைது 

விளையாட்டு: 

ஐபிஎல் 2024: முதல் வெற்றி யாருக்கு..? ஹைதராபாத் – மும்பை அணிகள் இன்று மோதல்.
டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர் சத்யன் 60வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி. 
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 

Published at : 27 Mar 2024 07:06 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link