தமிழ்நாடு:
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது – முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை செங்கலை கொடுக்க மாட்டேன் – தேர்தல் பரப்புரையில் உதயநிதி கலகல பேச்சு
தேனி, திருச்சி தொகுதியில் போட்டியில் அமமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்க வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான்
மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமாகா சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு
மக்களவை தேர்தலுக்கான நெல்லை தொகுதி வேட்பாளர் மாற்றம் – சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி அறிவிப்பு
தென்காசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து – 24 அறைகள் இடிந்த நிலையில் பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
இரட்டை ரயில் பாதை பணி நடைபெறுவதால் நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 27 வரை ரத்து
சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக வங்கதேச எல்லையில் கைது செய்யப்பட்ட சேலையூர் சிறப்பு காவல் ஆய்வாளர் – தமிழக காவல்துறை அதிர்ச்சி
மக்களவை தேர்தலுக்கான பணிக்குழு பொறுப்பாளர்களை வெளியிட்டது அதிமுக
தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
இந்தியா:
மக்களவை தேர்தலுக்கான 4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலுக்கு எதிராக மனு – அவசரமாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
சிறையில் இருந்தாலும் மக்கள் சேவை தொடரும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை என பாஜக விளக்கம்
மறு அறிவிப்பு வரும் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு
மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட கவிதாவின் காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு
இமாச்சலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பாஜகவில் இணைந்தனர்
ரஷியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்
மக்களவை தேர்தலில் இருந்து குஜராத்தைச் சேர்ந்த 2 வேட்பாளர்கள் விலகலால் தொண்டர்கள் அதிர்ச்சி
உலகம்:
ரஷ்யாவில் ஐ.எஸ். ஆயுத குழுவினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 133 ஆக உயர்வு
ரஷ்யாவில் ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் – மொத்தம் 11 பேர் கைது
ரஷ்யாவில் ஆயுதக்குழுவினரின் தாக்குதல் நடக்கலாம் என முன்பே எச்சரித்த அமெரிக்கா
பூட்டான் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள மருத்துவமனையை திறந்து வைத்தார்
விளையாட்டு:
ஐபிஎல் 2024: டெல்லி அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஐபிஎல் 2024: கொல்கத்தா அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் – லக்னோ, மும்பை – குஜராத் அணிகள் மோதல்
Published at : 24 Mar 2024 07:11 AM (IST)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண