தமிழ்நாடு:
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை; பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி
மாநில அரசிடம் பணத்தை வாங்கி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் மோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
சிஏஏ எனப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்புடையதல்ல என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ”தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான நடிகர் விஜய் நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கியுள்ளார்.
மமங் தாய் எழுதிய தி பிளாக் ஹில் எனும் ஆங்கில நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 25ம் தேதி முதல் நவகிரக கோயில்களுக்கு சிறப்பு ஏ.சி. பேருந்து வசதி – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
இந்தியா:
கர்நாடகாவில் நிறமூட்டப்பட்ட கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய் உள்ளிட்ட உணவுகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்து அரசிதழில் வெளியிட்டது.
தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்தவர்கள் பட்டியலை எஸ்பிஐ இன்று சமர்பிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் கெடு
வரும் 15 ஆம் தேதி, பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தரவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரும் 19ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி – 5 ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் நிலவும் வறட்சியான சூழலில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும் நிலை இல்லை என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தின், டெர்மினல் 3 திறப்பு விழா ஒரு வரலாற்று தருணம் என அதானி போர்ட்ஸ் எம்.டி கரண் அதானி தெரிவித்துள்ளார்.
உலகம்:
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்வு.
அமெரிக்காவில் விமான விபத்து – 5 பேர் உயிரிழப்பு.
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்து உள்ளனர் என்பது என்னால் ஏற்று கொள்ள முடியாதது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆசிபா அலியை நாட்டின் முதல் பெண்மணியாக அதிபர் ஆசிப் அலி சர்தாரி அறிவிக்க உள்ளதாக தகவல்.
7 ஆஸ்கர் விருதுகளை வென்றது ஓப்பன்ஹெய்மர்; முதல் முறையாக விருது பெற்றார் கிறிஸ்டோபர் நோலன்
விளையாட்டு:
ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை; இந்திய வீரர் நிஷாந்த் தேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்.
சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ரோஹித் சர்மா சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் – அம்பத்தி ராயுடு
Published at : 12 Mar 2024 06:57 AM (IST)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண