தமிழ்நாடு:
மாநிலங்களையும், முதலமைச்சர்களையும் பிரதமர் மோடி விரும்பவில்லை – டெல்லியில் நடைபெற்ற கேரள அரசின் போராட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் – இந்தியா டுடே – சி வோட்டர் நடத்திய கருத்துகணிப்பில் தகவல்
திமுக அரசு 30 மாதங்களில் 8.65 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது – எடப்பாடி பழனிசாமியின் வெள்ளை அறிக்கை கோரிக்கைக்கு பதிலடி
ஆட்சியின் கடைசிக் காலத்திலாவது நிதிப்பகிர்வை தந்திடுங்கள் – பாஜக அரசுக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்
மக்கள் பிரச்னையை பாஜக காது கொடுத்து கேட்காததால் கூட்டணியில் இருந்து பிரிந்தோம் – எடப்பாடி பழனிசாமி விளக்கம்
அண்ணாமலையை நம்பி சென்றால் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை தான் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு – ஓய்வு எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை
அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் – நிதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி
கோடை காலம் தொடங்கும் முன்பே கொளுத்தும் வெயில் – ஈரோட்டில் இரண்டாவது நாளாக சதமடித்த வெப்பநிலை
இந்தியா:
பாஜக அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் – 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாக சாடல்
உத்தராகண்டில் மாநகராட்சி நிர்வாகம் மதராசா கட்டடத்தை இடிகக் முயன்றதால் கலவரம் – வன்முறையில் வாகனங்கள், காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம்
உத்தராகண்டில் வன்முறையை கட்டுப்படுத்த ஹல்த்வாணி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் – துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு
சென்னை – பெங்களூரு தேசிய நெடுங்சாலை பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
பிரதமர் மோடி பிறப்பால் ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்ல – ராகுல் காந்தி பேச்சு
மக்களவை தேர்தலில் அசாம் மாநிலத்தில் தனித்து போட்டி என ஆம் ஆத்மி அறிவிப்பு – 3 வேட்பாளர்கள் பெயர் வெளியீடு
பேஸ்புக் நேரலையில் பயங்கரம் – மும்பையில் சிவசேனா தலைவர் மகன் சுட்டுக் கொலை
உலகம்:
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் முன்னிலை – விரைவில் முழு முடிவு வெளியாகும்
புதிய காலநிலை செயற்கைகோளை செலுத்திய நாசா – வானிலை நிலவரங்களை துல்லியமாக வழங்கும் என விளக்கம்
அலுவலக நேரத்திற்குப் பிறகு செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்யும் உரிமை – ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்
விளையாட்டு:
ஜுனியர் உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி – 11ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது
மகளிர் புரோ ஹாக்கி: இந்தியா – அமெரிக்கா அணிகள் இன்று மோதல்
Published at : 09 Feb 2024 07:04 AM (IST)
மேலும் காண