7 Am Headlines today 2024 26th February headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
வளர்ச்சியில் தமிழ்நாடு பின்னோக்கி செல்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு 
மெரினாவில் கருணாநிதி நினைவிடம் இன்று திறப்பு – புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தையும் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் 
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பொறுமையாக முடிவெடுப்போம் என சமக தலைவர் சரத்குமார் பேச்சு
டாஸ்மாக் கடைகளை மூடுவதை விட குடிப்பழக்கம் இருப்பவர்களை மீட்பதே முக்கியம் – அமைச்சர் முத்துசாமி பேச்சு 
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம் 
நீலகிரியில் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் தொடக்கம் – இன்று முதல் 99 பேருந்துகள் இயக்கம் 
தென் தமிழக கடலோரங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு  – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 
விஜயதரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு 
மார்ச் 1 ஆம் தேதி அதிமுக பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தலைமைக்கழகம் அறிவிப்பு 
சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தபடி தூத்துக்குடி மின்வாகன மின் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
மழை, வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை என தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சென்னை பள்ளிக்கரணையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் கொலை – 5 பேர் கைது 
தென்காசி அருகே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து – துரிதமாக செயல்பட்டு ரயில் விபத்தை தவிர்த்த தம்பதிகள் 

இந்தியா:

ராஜஸ்தானில் இந்தியா – ஜப்பான் இடையே கூட்டுப்போர் பயிற்சி – 40 பேர் அடங்கிய குழு இந்தியா வருகை 
5 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைத்த பிரதமர் மோடி – இந்தியா மிக வேகமாக வளர்வதாக பேச்சு
உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 7 பேர் உயிரிழப்பு 
கடலுக்கு அடியில் நீரில் மூழ்கிய துவாரகா நகரை பார்வையிட்ட பிரதமர் மோடி – தெய்வீகமான அனுபவம் என உருக்கம் 
பிரதமர் மோடி சொன்னதைப் போல 370 தொகுதிகளில் எல்லாம் பாஜக வெற்றி பெறாது – பிரஷாந்த் கிஷோர் கணிப்பு
இந்திய நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு 
ஜம்மு காஷ்மீரில் ஓட்டுநர் இல்லாமல் 70 கி.மீ. தூரம் ஓடிய சரக்கு ரயில் – பொதுமக்கள் அதிர்ச்சி 
2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி 

உலகம்:

2 ஆண்டுகளை நிறைவு செய்த ரஷ்யா – உக்ரைன் போர் ; இதுவரை 31 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு என அதிபர் ஜெலன்ஸ்கி தகவல் 
அமெரிக்காவில் கூகுள் பே சேவை ஜூன் மாதம் முதல் நிறுத்தப்படும் என அறிவிப்பு 
ஆப்பிள் ஐபேடை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்திய பெண் 

விளையாட்டு:

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் குஜராத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி
ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் சௌராஷ்ட்ராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு 
ப்ரோ கபடி லீக் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் இன்று முதல் தொடக்கம் 
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ஆஸ்திரேலியா அசத்தல்
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி 

Published at : 26 Feb 2024 07:02 AM (IST)

மேலும் காண

Source link