7 am headlines today 2024 15th February headlines news tamilnadu india world

தமிழ்நாடு:

சென்னை ராஜகீழ்பாக்கத்தில் சைதை துரைசாமியை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தார்.
முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை சுமூகம்; இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு – ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பேரவையில் 2 தனி தீர்மானம் நிறைவேறியது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம் – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு
முடிவுக்கு வந்தது எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை பிரச்சினை; இரண்டாவது வரிசைக்கு ஓ.பன்னீர் செல்வம் மாற்றப்பட்டு ஆர்.பி.உதயகுமாருக்கு முன்வரிசையில் இடம்
உதகை மலை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கக் கூடாது – ரயில்வேக்கு அரசு வலியுறுத்தல்.
சென்னையில் 2023ல் நடந்த 499 விபத்துகளில் 504 பேர் உயிரிழப்பு – போக்குவரத்து போலீஸ் தகவல்
ஈரோடு: அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 5.50 ஏக்கர் நிலம் மீட்பு
பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
சென்னை நந்தனத்தில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் கரிகாலன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
செந்தில் பாலாஜியிடம் பறிமுதல் செய்த ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன – மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் பரபரப்பு வாதம்

இந்தியா:

அபுதாபியில் புதிதாக கட்டப்பட்ட இந்து கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஜெய்ப்பூரில் சோனியா காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
மாநிலங்களவைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டி.
டெல்லி செல்லும் விவசாயிகள் மீது 2ம் நாளாக டிரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.
விவசாயிகள் போராட்டம் காரணமாக ஹரியானாவில் மொபைல் இணையதள சேவை நிறுத்தம்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பஞ்சாபில் இன்று ரயில் மறியல் போராட்டம்.
மாநிலங்களவை தேர்தல்: மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு.
குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிறார் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா.
காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த அசோக் சவானுக்கு மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பு
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை. 

உலகம்:

பிரதமர் மோடி வருகையையொட்டி புர்ஜ் கலீபா கோபுரத்தில் ஒளிர்ந்த இந்திய தேசியக் கொடி.
ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்து பிரதமர் மோடி கத்தார் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் கண்டுபிடிப்பு.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு.
மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

விளையாட்டு:

ப்ரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணிஐ வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி.
ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : இந்தியா காலிறுதிக்கு தகுதி.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. 
இந்தியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குவதன் மூலம் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்

Published at : 15 Feb 2024 07:03 AM (IST)

மேலும் காண

Source link