7 am headlines today 2024 11th February headlines news tamilnadu india world

தமிழ்நாடு:

ஜெர்மனியில் நடைபெற்ற சமையல் ஒலிம்பிக்கில் சென்னைஸ்  அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 3 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று  சாதனை படைத்துள்ளனர். 
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழி தொழில்நுட்பத்திற்காக நாட்டிலேயே முதன் முதலாக ’கணித்தமிழ் மாநாடு’ நடத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரட்டியுள்ளார். 
செங்கல்பட்டில் பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையிட்டு வழக்கில் இறுதி தீர்ப்பு 12 ஆம் தேதி வழங்கப்படுமென விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் 10 நாள் பிரமாண்ட மலர் கண்காட்சி – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஜெயலலிதா எப்போ இறப்பார் என காத்திருந்த எடப்பாடி – ஓ.பன்னீர்செல்வம் 
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மைவி3 நிர்வாகி தலைமையில் திடீர் முற்றுகை போராட்டம்: சக்தி ஆனந்தன் உட்பட 200 பேர் கைது
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம்: தமிழகத்தில் 27 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

இந்தியா: 

கடந்த ஆண்டில் நன்கொடை மூலம் பாஜகவுக்கு ரூ.2361 கோடி வருவாய்; காங்கிரஸுக்கு கிடைத்ததை விட 5 மடங்கு அதிகம் – இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை
யாருடைய குடியுரிமையும் பறிபோகாது; மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் – அமித்ஷா திட்டவட்டம்
திருநங்கைகள் உட்பட ஒதுக்கப்பட்ட மக்கள் மீது கவனம் செலுத்துவதாகவும், அவர்களில் 17,000 பேர் அடையாள அட்டைகளைப் பெற்றுள்ளனர் – மக்களவையில் பிரதமர் மோடியின் கடைசி உரை
மேற்கு வங்கத்தில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய கோரி பெண்கள் போராட்டம் முற்றியதை தொடர்ந்து 144 தடை விதிக்கப்பட்டுள்ளது
மதிய உணவின்போது பிரதமர் மோடி, அவரது தினசரி பழக்க வழக்கங்கள் பற்றி எங்களிடம் பேசினார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவதாக திமுக நாடாளுமன்ற குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.

உலகம்:

ஆஸ்திரேலியாவில் இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு.
பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்ற 3 சுயேட்சை நவாஸ் ஷெரீப்பின் கட்சிக்கு ஆதரவு.
காசாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் – 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

விளையாட்டு: 

அண்டர் 19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா – ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை.
சென்னை ஓபன் டென்னிஸ்: ராம் குமார் – மைனெனி ஜோடி சாம்பியன்.
எஸ்.ஏ.20 ஓவர் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இரண்டாவது முறையாக சாம்பியன்.
ப்ரோ கபடி லீக்: புனேரி புல்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இன்று களமிறங்குகிறது தமிழ் தலைவாஸ் அணி

 

Published at : 11 Feb 2024 07:01 AM (IST)

மேலும் காண

Source link