7 am headlines today 2024 10th February headlines news tamilnadu india world

தமிழ்நாடு:

பிப்ரவரி 14 முதல் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்; 1768 பணிக்கு ஜூன் 23ல் தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
தமிழ்நாடு மீனவ சமூகங்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க கூட்டு நடவடிக்கை குழுவை புதுப்பிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை செம்மொழிப் பூங்காவில் இன்று மலர் கண்காட்சி; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
பல்வேறு முறைகேடுகளை உறுதி செய்தது விசாரணை குழு; பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய அதிரடி உத்தரவு
தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மயிலாப்பூரில் பாஜக திறந்த தேர்தல் அலுவலகத்திற்கு சீல்; அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை
ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சீர்காழியில் வருகின்ற 18-ம் தேதி மூன்றாயிரம் இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணையும் விழா எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் நடைபெற்ற உள்ளது.
தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, தனித்தனியாக 9 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தியா:

முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது, தமிழ்நாடு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு கௌரவம் – பிரதமர் மோடி அறிவிப்பு
வழிபாட்டு தல ஆக்கிரமிப்பை இடித்த விவகாரத்தில் உத்தரகாண்ட் கலவரத்தில் கல்வீச்சு, துப்பாக்கிச்சூடு: 6 பேர் உயிரிழப்பு, 250 க்கு மேற்பட்டோர் காயம்; ஊரடங்கு உத்தரவு அமல்
நீர் மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிறை தண்டனைக்கு பதிலாக இனி அபராதம் மட்டும் வதிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 13ஆம் தேதி மாலை திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் GSLV-F14 விண்கலம் வரும் 17ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

உலகம்: 

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் வெற்றி, சுயேட்சையாக போட்டியிட்டு அபாரம் – நவாஸ், பிலாவல் பூட்டோ படுதோல்வி
பயிற்சியின்போது ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – 5 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பணி நேரம் முடிந்தபிறகு அலுவல் தொடர்பான ஃபோன் அழைப்புகள், மெசேஜ்கள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பாக ஆஸ்திரேலியா அரசு புதிய சட்டம் அமலாக உள்ளது.

விளையாட்டு: 

ப்ரோ ஹாக்கி லீக்: இந்தியா – ஸ்பெயின் இன்று மோதல்
19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நாளை இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோத இருக்கின்றன.
ஓமர்சாய், முகமது நபி சதம் வீண் : இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 
 பதும் நிஷன்கா முதல் இரட்டைச் சதம் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Published at : 10 Feb 2024 07:02 AM (IST)

மேலும் காண

Source link