தமிழ்நாடு:

சென்னையில் இன்று (ஜனவரி 19ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கேலோ இந்தியா போட்டியை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

அண்ணாமலைக்கு முதல்வர் கனவே இல்லை. அவர்கள் கட்சி மாதிரி ஒருவரை தூக்கி பிடித்து இவர் தான் என காட்ட மாட்டோம் என பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் ஆற்காடு வீராசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு புறப்பட்டு 4.45 சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் பிரதமர் மோடி.

மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை; ராமர் கோயில் வந்தது பிரச்சனை இல்லை, அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான், அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கடலூரில் தோனியின் தீவிர ரசிகர் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமர் மோடி வருகையை ஒட்டி, 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு எதிராக மலிவான, தரம் தாழ்ந்த அரசியல் அவலம்; உயர்ந்த பொறுப்புக்கு சிறிதும் தகுதியில்லாத ஆளுநர்கள் – ஜனநாயக வழியில் முறியடிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

இந்தியா:

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் தபால் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் வலுவான வளர்ச்சி காணும் – ரிசர்வ் வங்கி கணிப்பு

அயோத்தி ராமர் கோயில் சுமார் 1000 ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும் வகையில், அறிவியல்பூர்வமாக கட்டப்பட்டுள்ளது.

செய்தி நுகர்வில் ஏற்பட்டுள்ள பரிணாம மாற்றங்களுக்கு மத்தியில், ட்ஜிட்டல் சேவையை மேம்படுத்துவது எப்படி என்பதற்காக DNPA சார்பில் ஆய்வு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் அமைந்துள்ள உலகின் உயரமான அம்பேத்கர் சிலையை, அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி மத்திய அரசின் அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்:

ஏஐ படுத்தும்பாடி, கூகுளில் இந்த ஆண்டிலும் பணி நீக்கங்கள் தொடரும் – சுந்தர் பிச்சை அதிர்ச்சி அறிவிப்பு

பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு.

ஆப்பிள் நிறுவன கைக்கடிகாரங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா.

விளையாட்டு:

ஆசியக் கோப்பை கால்பந்து; உஸ்பெகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வி.

15வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்; தென்னாப்பிரிக்காவில் இன்று தொடக்கம்.

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி தகுதி சுற்று அரையிறுதி; இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு