12th World Tamil Research Conference In Chennai When Know In Detail | சென்னையில் 12ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு; எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

12ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2025ஆம் ஆண்டு மே மாதம், தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ் ஆராய்ச்சி மாநாடு குறித்த பல்வேறு விவரங்கள் வெளியாகி உள்ளன. 
இந்த மாநாடு சென்னை, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. உலகில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் தமிழ் அறிஞர்களும் ஆர்வமுள்ள தமிழர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். 
உத்தேசத் தலைப்புகள்:
தமிழிசை, பொருளாதாரம்,தத்துவம் உளவியல் அறம், கலைகள், நுண் கலைகள் மேலாண்மை, அறிவியல், விவசாயம், சித்த மருத்துவம், ஓவியம், சிற்பம், நாடகம் திரைப்படம், திரையிசைப் பாடல்கள், நாட்டுப்புறவியல், இதழியல், ஊடகவியல் சமூக ஊடகவியல், ஒப்பிலக்கியத் துறை போன்ற மேலும் பல தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
ஆய்வுச் சுருக்கம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31 ஜூலை 2024.
தெரிவு செய்யப்பட்ட ஆய்வுச் சுருக்கங்களுக்கான முழுக்கட்டுரைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31 டிசம்பர் 2024.
மாநாட்டின் கருப்பொருள்: உலக மொழிகளில் தமிழின் ஆளுமையும் தாக்கமும்
* 2023, 2024ஆம் ஆண்டுகளில் வெளியான தமிழ் நூல்கள் பற்றிய குறிப்புகளும் விமர்சனங்களும் மாநாட்டிலும், இணைய வாயிலாகவும் வெளியிடப்படும். புத்தகக் காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
* வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஊடகவியலாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.
* பாரம்பரிய, நவீன ஓவியங்கள் இம்மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும்..
* தமிழ்த் திரைப்பட வரலாறு காட்சிப்படுத்தப்படும்.
* பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கென கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
* உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்கள், மன்றங்கள், அமைப்புகள் அழைக்கப்பட இருக்கின்றன.
* சிறந்த தமிழ் நூல், ஆவணப் படம், குறும்படத்திற்கு பரிசுகள் வழங்கப்படும்.
* சிறந்த தமிழ்ச்சேவை புரிந்தவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, மாநாட்டில் விருதுகள் வழங்கப்படும்.
* கடந்த மாநாட்டைப் போலவே, இந்த மாநாட்டிலும் கலந்துகொள்ள அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
* வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சிறப்பாகத் தமிழ்ப் பணி செய்யும் அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.
* சென்ற முறை அறிவிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், இந்த மாநாட்டில் வெளியிடப்படும்.
* சென்ற முறை அறிவித்த பெண்கள் மலர் இந்த மாநாட்டில் வெளியிடப்படும்
* பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழில் ஆய்வு செய்தவர்கள் மாநாட்டுக்கு அழைக்கப்பட இருக்கிறார்கள்.
* வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலுள்ள பிற மொழி அறிஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
* சிறந்த தமிழ்ப் படைப்புகள் நாடகமாக்கப்படும்.
* மாநாட்டையொட்டி, பாரம்பரிய தமிழ் விளையாட்டுகளும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
 
* திருநங்கைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் சிறப்பு அமர்வு அமைக்கப்பட உள்ளது.
* தமிழர் பாரம்பரிய உணவு, மருத்துவம், கலை, கைத்திறன், நெசவு போன்றவை காட்சிப்படுத்தப்படும்.
* ஒவ்வொரு நாட்டிலும் தமிழ் வளர்ச்சி பற்றிய ஆய்வரங்கு அமைக்கப்படும்.
* எழுத்தாளர்களையும் அவர்களின் நூல்களையும் அறிமுகப்படுத்த தனி அரங்கு ஏற்பாடு செய்யப்படும்.
* சிறு பத்திரிகைகளுக்குத் தனி அரங்கு ஏற்பாடு செய்யப்படும்.
* நவீன இலக்கியத்திற்குத் தனி அரங்கு ஏற்பாடு செய்யப்படும்.
* பக்தி இலக்கியத்திற்கென அரங்கு அமைக்கப்படும்.
* தமிழ் மொழிக்கு தேசிய, திராவிட, தமிழ் இயக்கங்களின் பங்களிப்பு பற்றிய அமர்வுகளுக்கெனத் தனி அரங்கு அமைக்கப்படும்.
* தமிழில் கணினி தொடர்பான அமர்வுகளுக்குத் தனி அரங்கு அமைக்கப்படும்.
* சிறார் இலக்கியத்துக்கெனத் தனி அரங்கு அமைக்கப்படும்.
* தமிழ் மருத்துவம் தொடர்பான அமர்வுகளுக்கெனத் தனி அரங்கு அமைக்கப்படும்.
இதுபோன்று மேலும் சில அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருதாகவும் மாநாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
 

Source link